அதிகரிக்கும் இறக்குமதி பருத்தி விலை: தத்தளிக்கும் நூற்பாலை நிறுவனங்கள்

Added : ஆக 20, 2022 | |
Advertisement
கோவை:இறக்குமதி பருத்தி விலை அபரிமிதமாக உயர்ந்ததால், நுாற்பாலைகள் தத்தளிக்கின்றன. கோவையில், 200க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிக நீண்ட இழை பருத்தி ஒரு கேண்டி (355 கிலோ) ஒரு லட்சத்து, நான்காயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதிக விலை கொடுத்து இறக்குமதி பருத்தியை வாங்கி, நுாற்பு செய்து நுாலாக மாற்றினாலும்,

கோவை:இறக்குமதி பருத்தி விலை அபரிமிதமாக உயர்ந்ததால், நுாற்பாலைகள் தத்தளிக்கின்றன. கோவையில், 200க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள் உள்ளன. தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மிக நீண்ட இழை பருத்தி ஒரு கேண்டி (355 கிலோ) ஒரு லட்சத்து, நான்காயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதிக விலை கொடுத்து இறக்குமதி பருத்தியை வாங்கி, நுாற்பு செய்து நுாலாக மாற்றினாலும், அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை. அதனால், பெரும்பாலான நுாற்பாலைகள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இச்சூழலை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் புரிந்து, நுாற்பாலைகளை தொடர்ந்து இயக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தரமான பருத்தி நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, நுாற்பாலை உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தென்னிந்திய நுாற்பாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வன் கூறுகையில், ''எம்.சி.எக்ஸ்., (மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் ஆப் இந்தியா) தளத்தில் இருந்தும், அந்த வர்த்தகத்தில் இருந்தும் பருத்தியை அகற்ற வேண்டும்.
''மல்டிநேஷனல் கம்பெனிகள் (எம்.என்.சி.,க்கள்) சீனாவைப்போல் உள்நாட்டு பருத்தியை கொள்முதல் செய்ய நம் நாட்டில் அனுமதிக்கக்கூடாது. நுாற்பாலைகளுக்கு ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் பருத்தி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு நுாற்புத்துறைக்கென்று போதுமான இருப்பு இருப்பதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X