முதல்வர் வருகையால் விடிவு காலம்: சாலையோரம் தேங்கிய மண் அகற்றம்| Dinamalar

முதல்வர் வருகையால் விடிவு காலம்: சாலையோரம் தேங்கிய மண் அகற்றம்

Added : ஆக 20, 2022 | |
கோவை:முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை முன்னிட்டு, சாலை பராமரிப்பு பணி முழு வீச்சில் நடக்கிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின், 23ம் தேதி கோவை வருகிறார். 24ம் தேதி ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி எதிர்புறமுள்ள காலியிடத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்; ஒரு லட்சத்து, 6 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள், பயனாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கான
முதல்வர் வருகையால் விடிவு காலம்: சாலையோரம் தேங்கிய மண் அகற்றம்

கோவை:முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை முன்னிட்டு, சாலை பராமரிப்பு பணி முழு வீச்சில் நடக்கிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின், 23ம் தேதி கோவை வருகிறார். 24ம் தேதி ஈச்சனாரி ரத்தினம் கல்லுாரி எதிர்புறமுள்ள காலியிடத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்; ஒரு லட்சத்து, 6 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள், பயனாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன.

அமைச்சர் செந்தில்பாலாஜி, இப்பணியை நேற்று பார்வையிட்டார். கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். எந்த இடம் வரை பார்வையாளர்களை அனுமதிப்பது, வாகன பார்க்கிங் அமைவிடம் பற்றி அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசித்தார்.முதல்வர் வருகையை முன்னிட்டு, உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையெங்கும் தேங்கியிருந்த மண் அகற்றப்படுகிறது. சாலை டிவைடர்களுக்கு கறுப்பு வெள்ளை பெயின்ட் அடிப்பது; குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில், 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளப்படுகிறது. குறிச்சி குளத்தை அழகுபடுத்தும் பணி நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. முதல்வர் வரும் வழித்தடம் என்பதால், இப்போது அங்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.இதில், மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் சாலை, போத்தனுார் சாலை, பொள்ளாச்சி பிரதான சாலை ஆகியவற்றில் நடைபாதை கற்கள் சீரமைத்தல், மையத்தடுப்பு சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணியை, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பார்வையிட்டு, பணிகளை துரிதமாக செய்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் செய்யுங்க!

சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலை, குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டது. தோண்டிய சாலை, சரி செய்யப்படாமல், ஓராண்டுக்கும் மேலாக குண்டும் குழியுமாக விடப்பட்டுள்ளது.எந்த ஒரு வாகனமும் எளிதில் சென்று விட முடியாத அளவுக்கு படு பாடாவதியாக மாறியிருக்கும் இந்த சாலையை சீரமைக்க, 10 கோடி ரூபாயை ஒதுக்கியது, தமிழக அரசு; ஜூன், 4ல் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால், இன்று வரை பணி துவங்கவில்லை. எப்போது இந்த அவலத்துக்கு முடிவு ஏற்படும் என்று மக்கள் ஏங்கித்தவிக்கின்றனர். முதல்வர் வருகைக்காக பொள்ளாச்சி சாலையை அழகுபடுத்தும் அதிகாரிகள், மக்கள் நலன் கருதி மதுக்கரை மார்க்கெட் சாலையையும் சரி செய்ய வேண்டும்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X