நவீன விமான முனைய கூரை அழகுபடுத்தும் பணிகள் ஜரூர்

Added : ஆக 20, 2022 | |
Advertisement
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் சர்வதேச நவீன முனையத்தின், முன்பகுதி கூரைகளை அழகுபடுத்தும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது.மொத்தம், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையத்தில், கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட
நவீன விமான முனைய கூரை அழகுபடுத்தும் பணிகள் ஜரூர்

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் சர்வதேச நவீன முனையத்தின், முன்பகுதி கூரைகளை அழகுபடுத்தும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.

சென்னை விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டும் பணி, 2018 செப்டம்பரில் துவங்கியது.மொத்தம், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த புதிய முனையத்தில், கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன.

தரை தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான, வழக்கமான நடைமுறைகள்; இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம், ஐந்து தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன.அவ்வாறு கடப்பட்டு வரும் கட்டடத்தின் முன்பகுதியில் கூரைகள் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சர்வதேச நவீன முனையத்தை அழகு படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. புறப்பாடு பயணிய ருக்கான இரண்டாவது தளத்திலும், முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தளத்திலும் உள்ள துாண்கள் பனைமரம் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளன.தற்போது, சுவர்களில் கடற்கரையில் மக்கள் அமர்ந்து, கடலை ரசிப்பது போன்ற ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நவீன முனையத்தின் முன்புற கூரைகள் அமைக்கப்பட்டு, உட்புறங்களை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதன் பணிகள் 2023ல் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X