இன்று இனிதாக...

Added : ஆக 20, 2022 | |
Advertisement
ஆன்மிகம் கும்பாபிஷேக விழாஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் தெற்கே, மங்கலம் ரோட்டிலுள்ள தாமரை குளக்கரையில் அமைந்த இக்கோவிலில், அவிநாசியில் சிவபுரம் சைவ மஹா சபை அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீசிங்கார வேலன், ஸ்ரீ கன்னிமார், சொர்ணாம்பிகை, சொர்ணேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. இன்று காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள் நடக்கும் விழாவில் பங்கேற்று
இன்று இனிதாக...

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழாஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் தெற்கே, மங்கலம் ரோட்டிலுள்ள தாமரை குளக்கரையில் அமைந்த இக்கோவிலில், அவிநாசியில் சிவபுரம் சைவ மஹா சபை அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீசிங்கார வேலன், ஸ்ரீ கன்னிமார், சொர்ணாம்பிகை, சொர்ணேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. இன்று காலை, 7:30 முதல் 8:30 மணிக்குள் நடக்கும் விழாவில் பங்கேற்று இறையருள் பெறலாம். அவிநாசி, பாரதி நகர், செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை, 7:00 மணி முதல் நடக்கிறது. இதில், விமானம் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது. காலை, 10:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஸ்ரீ சோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீமாதேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா காலை, 6:15 முதல், 7:45 மணிக்குள் நடக்கிறது. இதில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர். பொது திறப்பு விழாஅருள்ஜோதி ராமலிங்கர் தர்மசாலா டிரஸ்ட் புதிய கட்டட திறப்பு விழா, திருப்பூர், செவந்தாம்பாளையம், பாரத் பெட்ரோல் பங்க் அருகில் காலை, 8:00 மணிக்கு நடக்கிறது. மேயர் தினேஷ்குமார் திறந்து வைக்கிறார். தினமும், அன்னதான அடுப்பு பற்ற வைக்கப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.பொது மருத்துவ முகாம்லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர், கருவலுார் நண்பர்கள் குழு, பசுமை சுவாசம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச இருதயம் மற்றும் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை, கருவலுார், தெற்கு ரத வீதி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறுகிறது. காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்.இருதய பரிசோதனைலயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் ரோட்டரி, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டர் ஆகியன இணைந்து இலவச கண், இருதய பரிசோதனை முகாம், பெரியார் காலனி, மனவளக்கலை மன்றத்தில், இன்று காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்று இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.யோகாசன பயிற்சிநோயில்லாமல், விரைவில் முதுமை அடையாமல், உடல் வளம், மனவளம், பொருள் வளம், தொழில் திறமை, உயர் நட்பு என அனைத்தும் அளித்து சிறப்பிக்க வல்லது யோகாசனம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கலையை, கொங்கு நகர், எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மன்றத்தில், பெண்களுக்கு காலை, 10:00 மணிக்கும், இருபாலருக்கு மாலை, 5:00 மணிக்கும் பயிற்சியை கற்றுத்தருகின்றனர். ஆர்வமுள்ளோர் பங்கேற்று வாழ்வை வளப்படுத்தி கொள்ளலாம்.கவன ஈர்ப்பு பேரணிவிவசாயத்தின் நீர் ஆதாரமாக இருந்து வரும் பி.ஏ.பி., பாசன தண்ணீரை ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்லும் அரசு திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி, பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவில் காலை, 10:00 மணிக்கு துவங்கி, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைகிறது. இதனை, பரம்பிக்குளம் ஆழியாறு பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்துகிறது.கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிமா.கம்யூ., சார்பில் சுதந்திர தின பவள விழா கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. தாராபுரம் ரோடு. வெள்ளியங்காடு பகுதியிலுள்ள நால்ரோட்டில் மாலை, 5:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்திரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரை ஆற்றுகின்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.கிரிக்கெட் போட்டிதிருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி திருப்பூர், அணைப்புதுாரிலுள்ள 'டீ பப்ளிக்' பள்ளி மைதானத்தில், காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. 19 வயதுக்குட்பட்டவருக்கு நடக்கும் காலிறுதி போட்டியினை, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.மாநில மாநாடுதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) 8வது மாநில மாநாடு, திருப்பூர், அவிநாசி ரோடு, காந்திநகர், முத்தன் செட்டியார் சின்னம்மாள் மஹாலில் மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.பாராட்டு விழாகல்வி, ஆன்மிகம், விளையாட்டு துறைகளில் அயராது பணியாற்றி வருபவர் பேராசிரியர் சுவாமிநாதன். இவருக்கு வ.உ.சி., வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மேயர் தினேஷ்குமார் கவரவிக்க உள்ளார். திருப்பூர் வாலிபாளையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.இலக்கிய சங்கமம்திருப்பூர் மக்கள் மாமன்றம் மற்றும் கனவு அமைப்பு இணைந்து, துாரிகை சின்னராஜின் நுால்கள் அறிமுக விழா செய்கிறது. திருப்பூர் மக்கள் மாமன்ற அலுவலகத்தில், காலை, 10:00 மணி முதல் நடக்கும் விழாவில், வகுப்பறைக்கு வெளியே ஓர் உலகம், கோவை சில குறிப்புகள், சுப்ரபாரதிமணியனின் புதுச்சேரிக்காரங்கள் ஆகிய நுால்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.நுால் வெளியீடுதிருப்பூர் மாவட்ட தமிழ்ச்சங்கம் சார்பில் அருட்பெருஞ்ஜோதி அலங்காரம் நுால் வெளியீட்டு விழா, கருவம்பாளையம் அருகேயுள்ள சமரச சன்மார்க்க சங்கத்தில் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு நடக்கும் விழாவில், கோவை பாரதியார் பல்கலை ஆட்சி பேரவை குழு உறுப்பினராக பொறுப்பேற்கும் பாசறை கவிஞர் முனைவர் ஆதலையூர் சூரியகுமாருக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X