குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தினால்... கலெக்டர் கடும் எச்சரிக்கை

Added : ஆக 20, 2022 | |
Advertisement
திருப்பூர்:''குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களை நிரந்தரமாக மூட, உத்தரவிட வேண்டும்,'' என, கலெக்டர் வினீத், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கலெக்டர் வினீத் பேசியதாவது:மாவட்டத்தில், வயது முதிர்ந்தவர்கள், பராமரிப்பு இல்லையென மனு கொடுக்கின்றனர். சொத்தை ஏமாற்றி வாங்கியது, யாரும் பராமரிக்காமல்

திருப்பூர்:''குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களை நிரந்தரமாக மூட, உத்தரவிட வேண்டும்,'' என, கலெக்டர் வினீத், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கலெக்டர் வினீத் பேசியதாவது:மாவட்டத்தில், வயது முதிர்ந்தவர்கள், பராமரிப்பு இல்லையென மனு கொடுக்கின்றனர். சொத்தை ஏமாற்றி வாங்கியது, யாரும் பராமரிக்காமல் கைவிடுவது குறித்து மனு கொடுக்கின்றனர். அதுபோன்ற மனுக்கள் மீது, போலீசார், வருவாய்த்துறையுடன் இணைந்து, விரைவில் தீர்வு காண வேண்டும்.

விபத்து அறிக்கை
தங்களது சொத்துக்களை அளவீடு செய்து கொடுப்பது போன்ற மனுக்களையும் விரைந்து முடிக்க வேண்டும். மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவில், சாலை விபத்து தொடர்பான அறிக்கை கிடைக்க தாமதம் என தெரிவித்துள்ளனர்.சாலை விபத்த ஏற்பட்டதால், நிவாரணம் பெற வசதியாக, விரைவில் போலீஸ் அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

குழந்தை தொழிலாளர்
ஊத்துக்குளி உட்பட, மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் உள்ளதொழிற்சாலைகளில், குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாக புகார் வருகிறது. தொழிலாளர் துறையுடன் இணைந்து, வருவாய்த்துறையும் ஆய்வு நடத்த வேண்டும்.

இடைநிற்காத கல்வி
குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்களை நிரந்தரமாக மூட, உத்தரவிட வேண்டும். அப்போதுதான், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும். மீட்கப்படும் குழந்தைகளின் கல்வியை தொடரவும் ஆவன செய்ய வேண்டும். நோயாளிகள், குற்றவாளிகளின் குழந்தைகளும், தடையின்றி கல்வி கற்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். திருப்பூரில், குழந்தைகள் விரும்பியே பணிக்கு சென்றாலும், பள்ளிக்கல்வியை தொடர்ந்து படிக்க அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார். மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், ஆர்.டி.ஓ.,க்கள் பண்டரிநாதன், குமாரசாமிஉட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X