'ஒலிம்பிக் பதக்கமே லட்சியம்'

Added : ஆக 20, 2022 | |
Advertisement
திருப்பூர்:தமிழ்நாடு மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பூரை சேர்ந்த மாணவன் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார்.கிருஷ்ணகிரியில் 35வது மாநில தடகள போட்டி மாவட்ட தடகள சங்கம் சார்பில், கடந்த, 17ம் தேதி துவங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து, 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டி, 14, 16, 18 மற்றும் 20 வயது என நான்கு பிரிவுகளாக நடந்தன.
'ஒலிம்பிக் பதக்கமே லட்சியம்'

திருப்பூர்:தமிழ்நாடு மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பூரை சேர்ந்த மாணவன் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார்.கிருஷ்ணகிரியில் 35வது மாநில தடகள போட்டி மாவட்ட தடகள சங்கம் சார்பில், கடந்த, 17ம் தேதி துவங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து, 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டி, 14, 16, 18 மற்றும் 20 வயது என நான்கு பிரிவுகளாக நடந்தன. இதில், 20 வயது ஆண்கள் 400மீ தடை தாண்டும் ஓட்டத்தில், மாணவன் விஷ்ணுஸ்ரீ தங்கம் வென்றார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:திருப்பூர் 'ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப்'பில், ஐந்து வயதில் இருந்து பயிற்சி எடுக்கிறேன். பயிற்சியாளர் அழகேசன் உறுதுணையாகஇருந்தார்.தடகள ஓட்டம், உயர் தாண்டுதலில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். தற்போது சென்சுரி பவுண்டேசன் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறேன்.மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம், திண்டுக்கல்லில் நடந்த தேசிய போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம், 300 மீ ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.தொடர்ந்து தெற்கு மண்டலம், தேசிய அளவில் பங்கேற்று வெற்றிபெற்றால் 'யங் ஒலிம்பிக்'கில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். வரும், 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே லட்சியம்.இவ்வாறு, அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X