வேளச்சேரி 2வது மேம்பாலம்: விரைவில் திறக்க நடவடிக்கை| Dinamalar

வேளச்சேரி 2வது மேம்பாலம்: விரைவில் திறக்க நடவடிக்கை

Added : ஆக 20, 2022 | |
சென்னை:வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில், 2வது மேம்பாலம் கட்டுமான பணி முடிந்ததால், விரைவில் திறக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.வேளச்சேரியில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து, 2016 பிப்., மாதம் பணி துவங்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பணியை துவக்கி வைத்தார்.சென்னையில்,
வேளச்சேரி 2வது மேம்பாலம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை:வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலத்தில், 2வது மேம்பாலம் கட்டுமான பணி முடிந்ததால், விரைவில் திறக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


வேளச்சேரியில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து, 2016 பிப்., மாதம் பணி துவங்கியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பணியை துவக்கி வைத்தார்.சென்னையில், முதன்முறையாக கட்டப்படும் இரண்டடுக்கு மேம்பாலம். தரமணி சாலையில் இருந்து, விரைவு சாலை வரை, 36 துாண்கள் அமைத்து பாலம் கட்டப்பட்டன.


இதன், மைய பகுதி, 50 அடி உயரம் உடையது.2 ஆண்டில், இரு வழிபாதை மேம்பால பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், நில ஆர்ஜிதம், வழக்குகள் நிலுவை, கொரோனா, சட்டசபை தேர்தல் போன்ற காரணத்தால், பணி ஆமை வேகத்தில் நடந்தது.


இந்நிலையில், தரமணி - விரைவு சாலை வழித்தட மேம்பாலத்தை, கடந்த ஆண்டு நவ., 1ல் , முதல்வர் ஸ்டாலின் நேரடியாக திறந்து வைத்தார்.விரைவு சாலை -- தாம்பரம் சாலை இரண்டாவது மேம்பாலம், 17 துாண்கள் அமைத்து கட்டப்பட்டுள்ளது. இதன், மைய பகுதி, 25 அடி உயரம் உடையது. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன.விரைவில் மேம்பாலத்தை திறக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X