பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து:போதை ஆசாமி 'எஸ்கேப்'

Added : ஆக 21, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் அரசு பஸ் டிரைவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக அன்னுாருக்கு, 1சி/25 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று இரவு, 7:35 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வெளியே வரும்போது, திடீரென போதையில் ஒருவர் வேகமாக ஓடிவந்து
பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து:போதை ஆசாமி 'எஸ்கேப்'

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் அரசு பஸ் டிரைவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக அன்னுாருக்கு, 1சி/25 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று இரவு, 7:35 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வெளியே வரும்போது, திடீரென போதையில் ஒருவர் வேகமாக ஓடிவந்து மது பாட்டிலை உடைத்து பஸ் முன் நின்றார்.அதிர்ச்சி அடைந்த மீனம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் அருணாச்சலம், 42, பஸ்சை நிறுத்தி விலகிச் செல்லும்படி கூறினார். விலகிச் செல்லாததால், டிரைவர் கீழே இறங்கி வந்து, போதையில் இருந்தவரை விலகக் கூறினார். அப்போது, போதை ஆசாமி தான் வைத்திருந்த கத்தியால், டிரைவரின் கை, வயிற்றில் குத்தி விட்டு தப்பினார். பலத்த காயமடைந்த டிரைவர் அருணாச்சலம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X