வெடிகுண்டு மிரட்டல்விடுத்த நபருக்கு வலை| Dinamalar

வெடிகுண்டு மிரட்டல்விடுத்த நபருக்கு வலை

Added : ஆக 21, 2022 | |
கோவை:சேலம் மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக மிரட்டியவரை போலீசார் தேடுகின்றனர்.சேலம், மேட்டூரில், 1934ல் திறக்கப்பட்ட அணை, பல மாவட்டங்களின் விவசாய பயன்பாட்டிற்கான நீராதாரமாக உள்ளது. இந்த அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் கூறினார். தனது பெயர் பாலசுப்ரமணியம்

கோவை:சேலம் மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாக மிரட்டியவரை போலீசார் தேடுகின்றனர்.சேலம், மேட்டூரில், 1934ல் திறக்கப்பட்ட அணை, பல மாவட்டங்களின் விவசாய பயன்பாட்டிற்கான நீராதாரமாக உள்ளது. இந்த அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் கூறினார். தனது பெயர் பாலசுப்ரமணியம் எனக்கூறிய அந்நபர் மொபைல்போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார்.மொபைல் போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தபோது, கோவை மாவட்டம், சுந்தராபுரம் அருகே காமராஜர் நகரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரின் பெயரில் இருப்பது தெரிந்தது. மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் கணேஷ்குமாரின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.விசாரணையில், கணேஷ்குமார் 'ஒர்க் ஷாப்' வைத்து நடத்தி வருவதும், அவரது தாயின் சகோதரி மகனான பெங்களூருவில் வேலை பார்க்கும் செந்தில் இரு நாட்களுக்கு முன் வந்து, 'சிம் கார்டு' வாங்கி தருமாறு கேட்டுள்ளார். தனது ஆதார் கார்டை கொடுத்து கணேஷ்குமார் சிம் கார்டு வாங்கி கொடுத்ததும் தெரிந்தது. நீண்ட நேர விசாரணைக்கு பின் போலீசார் அவரை விடுவித்தனர். இத்தகவல் சென்னைக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, செந்திலை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X