அணைக்கு 'குண்டு' மிரட்டல் மேச்சேரியில் 'மப்பு' ஆசாமி கைது

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சேலம்:மேட்டூர் அணைக்கு குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை, மேச்சேரியில் போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று முன்தினம் இரவு, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்துக்கு போனில் தகவல் போனது. மேட்டூர் போலீசார், விடிய விடிய நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.தகவல் தெரிவித்த மொபைல் போன் சிக்னல் குறித்து ஆய்வு செய்தபோது, சேலம்

சேலம்:மேட்டூர் அணைக்கு குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை, மேச்சேரியில் போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று முன்தினம் இரவு, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்துக்கு போனில் தகவல் போனது. மேட்டூர் போலீசார், விடிய விடிய நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.தகவல் தெரிவித்த மொபைல் போன் சிக்னல் குறித்து ஆய்வு செய்தபோது, சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை காட்டியது. உரிமையாளர் முகவரி கோவை என தெரிந்ததால், இரு இடத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மேச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்த மகாலிங்கம், 53, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் கோவை, சிறுமுகை, அம்மன்புதுாரை சேர்ந்தவர் என தெரிந்தது.போலீசார் கூறியதாவது:மகாலிங்கத்தின் மனைவி, ஏழு ஆண்டுக்கு முன் கணவரை பிரிந்து, தர்மபுரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இரு மகள்கள் சில ஆண்டுக்கு முன், மருக்கம்புதுார் ஏரியில் மூழ்கி இறந்து விட்டனர். மன உளைச்சலால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சில நாட்களுக்கு முன் மேட்டூர் வந்தவர், முனியப்பன் கோவில் பகுதியில் தங்கியிருந்தார். போதை தலைக்கேறிய நிலையில், மொபைல்போனில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளார். மேச்சேரி பஸ் ஸ்டாண்டில் திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுக்கு முன், இரும்பு கம்பி திருடிய வழக்கில், சிறுமுகை போலீசாரால் கைது செய்யப்பட்டு, இரண்டு மாதம் சிறையில் இருந்துள்ளார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X