இதே நாளில் அன்று

Added : ஆக 21, 2022 | |
Advertisement
ஆகஸ்ட்21, 1995நாடு சுதந்திரம் அடையும் முன், ஒன்றுபட்ட இந்தியாவில், பாகிஸ்தானின் லாகூரில், 1910 அக்டோபர், 19ல், சுப்பிரமணிய அய்யர் -- சீதாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சந்திரசேகர். தந்தை அரசு அதிகாரி என்பதால், லாகூர், லக்னோவை அடுத்து, சென்னைக்கு மாறியது குடும்பம்.இவர், சென்னை ஹிந்து உயர்நிலை பள்ளி, மாநில கல்லுாரி, சென்னை பல்கலைகளில் படித்தார். தன் சித்தப்பா சி.வி.ராமனின்
இதே நாளில் அன்று

ஆகஸ்ட்21, 1995

நாடு சுதந்திரம் அடையும் முன், ஒன்றுபட்ட இந்தியாவில், பாகிஸ்தானின் லாகூரில், 1910 அக்டோபர், 19ல், சுப்பிரமணிய அய்யர் -- சீதாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சந்திரசேகர். தந்தை அரசு அதிகாரி என்பதால், லாகூர், லக்னோவை அடுத்து, சென்னைக்கு மாறியது குடும்பம்.
இவர், சென்னை ஹிந்து உயர்நிலை பள்ளி, மாநில கல்லுாரி, சென்னை பல்கலைகளில் படித்தார். தன் சித்தப்பா சி.வி.ராமனின் உந்துதலால், இயற்பியல் ஆய்வு நுால்களை கற்றார். சென்னையில் விஞ்ஞானி அர்னால்டு சோமர்பெல்டுடன் உரையாடி, உத்வேகம் பெற்றார். பின், 1929ல் நடந்த, இந்திய அறிவியல் மாநாட்டில் முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். தொடர்ந்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலை உதவித் தொகையுடன் ஆய்வாளரானார். லண்டன் ராயல் சொசைட்டியில், வானியல் கட்டுரைகளை எழுதி புகழ் பெற்றார்.
டிரினிட்டி கல்லுாரி, சிகாகோ பல்கலையில் வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் கண்டறிந்த நட்சத்திரங்களின் ஆயுள், எடை, நிலைத்தன்மைக்கு, 'சந்திரசேகர் லிமிட்' என்று பெயர். அமெரிக்க குடியுரிமை பெற்ற இவருக்கு, நம்நாட்டின், 'பத்ம விபூஷன்' உட்பட பல உலக விருதுகள் கிடைத்தன. இவர், 1995ல், இதேநாளில், தன், 85வது வயதில் மறைந்தார். இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, இந்திய விஞ்ஞானியின் நினைவு தினம் இன்று!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X