போதைப் பொருள் கடத்தலை தடுக்க போலீசார்...அதிரடி!:'செக் போஸ்ட்டில்' வாகன சோதனை தீவிரம்; 9 நாளில், 77 கிலோ கஞ்சா, 184 கிலோ குட்கா பறிமுதல்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது நாட்களில் மட்டும், 77 கிலோ கஞ்சா, 184 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக, தமிழக - ஆந்திர மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில், 24 மணி நேரமும், கூடுதல் போலீசாருடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. திருத்தணி - பொன்பாடி,
போதைப் பொருள் கடத்தலை தடுக்க போலீசார்...அதிரடி!:'செக் போஸ்ட்டில்' வாகன சோதனை தீவிரம்; 9 நாளில், 77 கிலோ கஞ்சா, 184 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது நாட்களில் மட்டும், 77 கிலோ கஞ்சா, 184 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக, தமிழக - ஆந்திர மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில், 24 மணி நேரமும், கூடுதல் போலீசாருடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. திருத்தணி - பொன்பாடி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி - எளாவூர் ஆகிய மூன்று முக்கிய சாலைகளில், ஆந்திர - தமிழக போக்குவரத்து உள்ளது. இச்சாலைகள் வழியாக, கஞ்சா கடத்தல் அதிகளவில் உள்ளது.



24 மணி நேரம் கண்காணிப்பு


தமிழகத்தில், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம், போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில், போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை, எஸ்.பி., தீவிரப்படுத்தி உள்ளார்.இதற்காக, எளாவூர், ஊத்துக்கோட்டை மற்றும் பொன்பாடி சோதனைச் சாவடிகளில், தலா ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், எஸ்.ஐ., காவலர்கள் என, கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.போதைப் பொருள் நடமாட்டத்தை கண்டறிய, மாவட்டம் முழுதும், எஸ்.ஐ., தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.இவர்கள், கஞ்சா விற்பனையாளர், கடத்தல்காரர்கள் மற்றும் குட்கா விற்பனை செய்வோர் போன்றவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.


பேருந்துகளில் 'அமோகம்'


ஆந்திர மாநிலத்தில் இருந்து, லாரி, கார், வேன்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டது. காவல் துறையினரின் கெடுபிடியால், கடத்தல்காரர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், பயணியர் 'போர்வை'யில் கஞ்சா கடத்தி வருகின்றனர்.இந்த தகவல் அறிந்த போலீசார், தற்போது, வாகன பரிசோதனையில், ஆந்திராவில் இருந்து வரும் ஒவ்வொரு பேருந்தையும் தீவிர சோதனையிட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.போதைப் பொருள் தடுப்பு குறித்து, திருவள்ளூர் எஸ்.பி., சீபாஸ் கல்யாண் கூறியதாவது:மாவட்டம் முழுதும், கடந்த 11 - 19ம் தேதி வரை, 7.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 77.25 கிலோ கஞ்சா; 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 184.66 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.


58 பேர் கைது


இது தொடர்பாக, 53 வழக்குகள் பதியப்பட்டு, 58 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.போதைப் பொருள் பழக்கம், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரிடம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க 10 நாட்களில், மாவட்டம் முழுதும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு போதைப் பொருள் குறித்து, 182 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்கள், தங்களது குழந்தைகளின் நண்பர்கள் வட்டத்தை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.உடன், ஏ.டி.எஸ்.பி., மீனாட்சி, டி.எஸ்.பி., சந்திரதாசன் இருந்தனர்.

எஸ்.பி.,க்கு தெரிவிக்கலாம்


திருவள்ளூர் மாவட்டத்தில், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை, பயன்பாடு குறித்து, பொதுமக்கள், 63799 04848 என்ற எண்ணிற்கு என்னிடம் நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர், விபரம் ரகசியம் காக்கப்படும் என, எஸ்.பி., சீபாஸ் கல்யாண் தெரிவித்தார்.



வெளி மாவட்டத்தினர்

காவல் துறையினர் கெடுபிடியால், இதுவரை விற்பனை செய்த, ஆந்திர மாநில வியாபாரிகள் வருவதில்லை. சென்னை, தேனி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர், ஆந்திர மாநிலத்தில் கஞ்சாவை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். அவர்களில் சிலர், திருவள்ளூர் மாவட்டத்தில், மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அவர்களின் விபரம் குறித்து, தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். கைது செய்யப்படும், கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என, எஸ்.பி., சீபாஸ் கல்யாண் தெரிவித்தார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X