நெல் கொள்முதல் நிலையங்கள் திருத்தணியில் திறந்தால் நல்லது

Added : ஆக 21, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி தாலுகாவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.திருத்தணி, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், 75 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.அதிகளவில் விவசாயிகள், நவரை, சொர்ணவாரி, சம்பா போன்ற பருவங்களில், நெல் பயிரிடுகின்றனர்.விவசாயிகள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், 15க்கும் மேற்பட்ட இடங்களில்

திருத்தணி:திருத்தணி தாலுகாவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
திருத்தணி, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், 75 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.அதிகளவில் விவசாயிகள், நவரை, சொர்ணவாரி, சம்பா போன்ற பருவங்களில், நெல் பயிரிடுகின்றனர்.விவசாயிகள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், 15க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.ஒவ்வொரு பருவத்திற்கு முன், கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும்.
இந்நிலையில், சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், நெல் அறுவடை துவக்கிஉள்ளனர்.சில விவசாயிகள், அறுவடை செய்த நெல் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கு இடமில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால், வயல்வெளி மற்றும் நெற்களத்தில் திறந்த வெளியில் நெல்மூட்டைகள் வைத்துள்ளனர்.
அவ்வப்போது பெய்து வரும் மழையால், நெல் மூட்டைகள் சேதம் அடையும் நிலை உள்ளதால், இதுவரை திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, கொள்முதல் செய்வதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X