சென்னை மண்டலம் பிரிப்பு: மின் வாரியம் ஆலோசனை| Dinamalar

சென்னை மண்டலம் பிரிப்பு: மின் வாரியம் ஆலோசனை

Added : ஆக 21, 2022 | |
சென்னை:சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு, ஒருங்கிணைந்த சென்னை மண்டலத்தை ஏற்படுத்துவதற்காக, திருவள்ளூரில் இருந்து எல்லைகளை பிரிப்பது தொடர்பாக மின் வாரியம் ஆலோசனை நடத்தியுள்ளது.தமிழக மின் வாரியம் சென்னை வடக்கு, சென்னை தெற்கு உள்பட ஒன்பது மண்டலங்களாக செயல்படுகிறது. சென்னை தெற்கு மண்டலத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும்; சென்னையில் உள்ள கிண்டி,

சென்னை:சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு, ஒருங்கிணைந்த சென்னை மண்டலத்தை ஏற்படுத்துவதற்காக, திருவள்ளூரில் இருந்து எல்லைகளை பிரிப்பது தொடர்பாக மின் வாரியம் ஆலோசனை நடத்தியுள்ளது.


தமிழக மின் வாரியம் சென்னை வடக்கு, சென்னை தெற்கு உள்பட ஒன்பது மண்டலங்களாக செயல்படுகிறது. சென்னை தெற்கு மண்டலத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும்; சென்னையில் உள்ள கிண்டி, கே.கே.நகர், போரூர், அடையாறு, ஐ.டி.காரிடார், தாம்பரம் ஆகிய பகுதிகளும் இடம்பெறுகின்றன.


சென்னை வடக்கு மண்டலத்தில் தி.நகர், மயிலாப்பூர், அண்ணாசாலை, எழும்பூர், அண்ணா நகர், அம்பத்துார், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திருவள்ளூரில் உள்ள பொன்னேரி ஆகியவை இடம்பெறுகின்றன.சென்னையின் இரு மண்டலங்களிலும், 45 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தினசரி மின் நுகர்வு சராசரியாக, 5.50 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. இது, மற்ற மண்டலங்களை விட அதிகம்.


எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டு, ஒருங்கிணைந்த சென்னை மண்டலத்தை ஏற்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை தெற்கு, திருவள்ளூர் மண்டலமாக பெயர் மாற்றப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தின் எல்லையை வரையறுப்பது தொடர்பாக மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று, அதன் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X