சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன்: தபால் தலை வெளியிட்டார் கவர்னர்

Added : ஆக 21, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
திருநெல்வேலி : சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின், 251வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று அவரது தபால் தலையை நெல்லையில் தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார்; தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.திருநெல்வேலியில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன், மதிவேந்தன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து
சுதந்திர போராட்ட வீரர்,  ஒண்டிவீரன், தபால் தலை, கவர்னர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


திருநெல்வேலி : சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின், 251வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று அவரது தபால் தலையை நெல்லையில் தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார்;

தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.திருநெல்வேலியில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன், மதிவேந்தன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மணிமண்டப வளாகத்தில், 51.78 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நுாலகத்தை விரைவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைப்பார் என, அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.தமிழக கவர்னர் ரவி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.மணிமண்டபம் அருகில் திருமண மண்டபத்தில் மத்திய அரசு சார்பில் நடந்த விழாவில், ஆர்.என்.ரவி, ஒண்டிவீரன் நினைவு தபால் தலையை வெளியிட்டு பேசினார்.


latest tamil news



தமிழிசை, எல்.முருகன், மதிவேந்தன், எம்.பி.,க்கள் ஞான திரவியம், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், தபால்துறை அதிகாரி ராஜேந்திரகுமார், ஒண்டிவீரன் பேரவையினர் பங்கேற்றனர்.கவர்னர் தமிழிசை பேசுகையில், ''நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது. வரலாற்றை தேடி படிக்க வேண்டும். இத்தகைய வரலாறுகளை எழுத வேண்டும்,'' என்றார்.

கொண்டாடும் தமிழக பா.ஜ.,

'சுதந்திர போராட்ட வீரர்களை கட்சி பேதம், இனம், மொழி, மதம் பேதங்களை பாராமல் உள்ளன்போடு உற்சாகமாக கொண்டாடி வருகிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவரது அறிக்கை:பூலித்தேவனின் போர்ப்படை தளபதியாக, நெல்கட்டும்செவல் பகுதியில் மல்லுக்கட்டிய மாவீரன் ஒண்டிவீரன். ஒற்றையாய் ஆங்கிலேயரை சிதற அடித்த காரணத்தால், ஒண்டி வீரன் என்று புகழ்பெற்றவர். தன் கையை தானே வெட்டி, நாட்டுக்கு காணிக்கையாக தந்த தலைசிறந்த தேசபக்தர். மன்னருக்கும், அவர் பின் வந்த மரபினருக்கும் வெற்றிகளை மட்டும் ஈட்டி தந்த வீர திருமகனாக விளங்கிய பெருமகனுக்கு, அஞ்சல்தலை வெளியிட்டு, ஆராதனை செய்கிறது மத்திய அரசு. தமிழக பா.ஜ.,வின் வேண்டுகோளை ஏற்று, மத்திய இணை அமைச்சர் முருகனின் சீரிய முயற்சியில், நெல்லையில் ஒண்டிவீரனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. பா.ஜ., சுதந்திர போராட்ட வீரர்களை கட்சி பேதம் பாராமல், இனம், மொழி, மதம் பேதங்களை பாராமல் உள்ளன்போடு உற்சாகமாக கொண்டாடி வருகிறது. நெல்லையின் காவல் தெய்வமாக திகழ்ந்த ஒண்டி வீரனை, பா.ஜ., சார்பில் வணங்கி போற்றி மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202219:21:18 IST Report Abuse
அப்புசாமி எங்க ஊரில் கவுண்டமணி ஒண்டிப்புலி பாத்திரத்தில் நடிச்சாரு. அவருக்கு ஒரு ஸ்டாம்பு போடுங்க. அவிங்க ஜாதி ஓட்டு விழும்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
21-ஆக-202211:06:50 IST Report Abuse
venugopal s வேலையத்த அம்பட்டன் ...ம் என்ற எங்கள் ஊர் பழமொழி ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஆக-202206:30:30 IST Report Abuse
Kasimani Baskaran நன்றிகெட்டு முண்டாசுக்கவிஞன் பாரதியையே மறந்த தமிழகம் இவர்களையெல்லாம் மறந்தது திராவிடச்சீரழிவு என்றுதான் சொல்ல வேண்டும். இதுமட்டுமா சுதந்திரம் வேண்டாம் என்று சுதந்திரதினத்தை துக்க தினமாக கொண்டாடிய ஈர வெங்காயத்தை தமிழகம் முழுவதும் சுதந்திரத்துக்கு பாடுபட்டதாக உருட்டி சுதந்திரத்துக்கு உழைத்தவர்களையெல்லாம் கேவலப்படுத்தினார்களே...
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
21-ஆக-202208:11:42 IST Report Abuse
chakraஎல்லா அரசியல் வியாதிகளும் அப்படித்தான் உனக்கு பிடித்த அரசியல் வியாதியும் அப்படித்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X