ரோட்டோரங்களில் கொட்டப்படும் ஓட்டல் கழிவுகள்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை--அருப்புக்கோட்டையில் நான்கு ரோடு சந்திப்பு அருகே ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு உள்ளது. இதில் எஸ்.பி.கே. பள்ளி ரோடு, தொட்டியாங்குளம் செல்லும் ரோடு ஆகியன சந்திக்கின்றன.இந்த சந்திப்பு
ரோட்டோரங்களில் கொட்டப்படும் ஓட்டல் கழிவுகள்



அருப்புக்கோட்டை--அருப்புக்கோட்டையில் நான்கு ரோடு சந்திப்பு அருகே ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை காந்தி நகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு உள்ளது. இதில் எஸ்.பி.கே. பள்ளி ரோடு, தொட்டியாங்குளம் செல்லும் ரோடு ஆகியன சந்திக்கின்றன.இந்த சந்திப்பு ரோடு அருகில் உள்ள காலி இடங்களில் அந்தப் பகுதியில் உள்ள ஓட்டல்கள்களின் கழிவுகள், இறைச்சி கழிவுகள், குப்பையை இரவு நேரங்களில் கொட்டுகின்றனர்.இந்த சந்திப்பு ரோட்டை கடந்து தான் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் மாணவர்கள். இந்த பகுதியை கடக்கும் வரை மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டி இருக்கிறது.தினமும் இந்த நாற்றத்தை சுவாசிப்பதால் தலைவலி ஏற்படுவதாகவும் புலம்புகின்றனர். மழைக்காலங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் மழை வெள்ளத்தோடு எஸ்.பி.கே., பள்ளி ரோடு வழியாக செல்வதால், ரோடு முழுவதும் துர்நாற்றம் எடுக்கிறது. நகரை சுத்தமானதாகவும், சுகாதார நகரமாகவும் மாற்றப்படும் என கூறும் நகராட்சி சுகாதார பிரிவு இந்த பகுதியை மட்டும் மறந்து விட்டனர்.நகராட்சி சுகாதாரப் பிரிவினர் இந்த பகுதியை ஆய்வு செய்து குப்பை, கழிவுகள் கொட்டும் ஓட்டல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X