ராமேஸ்வரம் கோயிலில் கிடந்த ரூ.7270 போலீசில் ஒப்படைப்பு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தவறவிட்ட ரூ.7270, ஏ.டி.எம்., கார்டுகளை யாத்திரை பணியாளர் சங்கத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கோயிலில் நீராடிய பக்தர்களில் யாரோ இரு பர்ஸ்களை தவற விட்டனர்.இதனை



ராமேஸ்வரம்--ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தவறவிட்ட ரூ.7270, ஏ.டி.எம்., கார்டுகளை யாத்திரை பணியாளர் சங்கத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கோயிலில் நீராடிய பக்தர்களில் யாரோ இரு பர்ஸ்களை தவற விட்டனர்.இதனை கிணற்றில்தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர் சங்க ஊழியர்கள் எடுத்து சென்று தலைவர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். அதில் ரூ.7270, ஒரு பான்கார்டு, 3 ஏ.டி.எம்., கார்டு, 1 ஆதார் கார்டுகள் இருந்தன.இதனை நேற்று கோயில் எஸ்.ஐ., ஸ்ரீராமிடம் யாத்திரை பணியாளர் சங்கத்தினர் ஒப்படைத்தனர். பக்தர்களின் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த யாத்திரை பணியாளர் சங்கத்தினரைசமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X