ஒற்றை யானை 'விசிட் 'மக்கள் உறக்கம் இழப்பு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
பந்தலுார் : பந்தலுார் பஜாரை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை யானையால் மக்கள் உறக்கம் இழந்தனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் பஜாரை ஒட்டி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில் பாறக்கல், இண்ட்கோ நகர், இரும்புபாலம் மற்றும் அரசு மருத்துவமனை குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஒற்றை யானை உலா வந்தது. பாறக்கல் கிராம
ஒற்றை யானை 'விசிட்  'மக்கள் உறக்கம் இழப்பு



பந்தலுார் : பந்தலுார் பஜாரை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை யானையால் மக்கள் உறக்கம் இழந்தனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் பஜாரை ஒட்டி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில் பாறக்கல், இண்ட்கோ நகர், இரும்புபாலம் மற்றும் அரசு மருத்துவமனை குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஒற்றை யானை உலா வந்தது. பாறக்கல் கிராம குடியிருப்புகளுக்கு மத்தியில் யானை நின்றிருந்ததை பார்த்த இளைஞர்கள், அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானையை விரட்ட முயன்றனர். ஆனால், யானை பஜாருக்குள் வர முயன்றது. வனத்துறையினர், இளைஞர்கள் இணைந்து, சத்தம் எழுப்பி யானையை விரட்டினர். எனினும், யானை கிராமப்புற குடியிருப்புகளுக்கு மத்தியில் முகாமிட்டது. இதனால், மக்கள் விடிய விடிய உறக்கம் இழந்தனர். நேற்று காலை, 8:00 மணிக்கு இரும்புபாலம் குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டம் வழியாக யானை வனத்துக்குள் சென்றது. யானை உலா குறித்து இளைஞர்கள் உஷார்படுத்தியதால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X