'தி ஆல் நியூ ஆல்ட்டோ கே 10' மாருதி கார் நிறுவனம் அறிமுகம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மாருதி சுசூகியின் 'தி ஆல் நியூ ஆல்ட்டோ கே 10' எனும் புதிய தலைமுறை கார், டில்லியில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 2,000ம் ஆண்டு செப்டம்பரில், மாருதி ஆல்ட்டோ காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த 22 ஆண்டுகளில், 43 லட்சம் வாடிக்கையாளர்கள், ஆல்ட்டோ கார்கள் வாங்கியுள்ளனர். 16 ஆண்டுகளாக
'தி ஆல் நியூ ஆல்ட்டோ கே 10' மாருதி கார் நிறுவனம் அறிமுகம்



புதுடில்லி : இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மாருதி சுசூகியின் 'தி ஆல் நியூ ஆல்ட்டோ கே 10' எனும் புதிய தலைமுறை கார், டில்லியில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 2,000ம் ஆண்டு செப்டம்பரில், மாருதி ஆல்ட்டோ காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த 22 ஆண்டுகளில், 43 லட்சம் வாடிக்கையாளர்கள், ஆல்ட்டோ கார்கள் வாங்கியுள்ளனர். 16 ஆண்டுகளாக அதிகமாக விற்பனை செய்யும் காராக ஆல்ட்டோ உள்ளது.தற்போது, ஆல்ட்டோவின் புதிய தலைமுறை காராக, 'தி ஆல் நியூ ஆல்ட்டோ கே 10' நேற்று முன்தினம் டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார், 1 லி., சி.சி., டியூயல் ஜெட் மற்றும் டியூவர் வி.வி.டி., இன்ஜின் திறன் உடையது. ஐந்து ஸ்பீடுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் என இரு வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, லிட்டருக்கு 24.90 கி.மீ., செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், ஏழு அங்குல அளவு ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் போன் நேவிகேஷன் உட்பட, நவீன வசதிகள் இடம் பெற்றுஉள்ளன.

மேலும், 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தி ஆல் நியூ ஆல்ட்டோ காரின் எக்ஸ் ஷோரூம் விலை, 3.99 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. இதன் ஆட்டோ கியர் கார் விலை, 5.49 லட்சம் ரூபாயில் துவங்குகிறது.தி ஆல் நியூ ஆல்ட்டோ காரை, மாருதி சுசூகியின் நிர்வாக இயக்குனர் ஹிசாஷி டேகுச்சி, மூத்த செயல் இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அறிமுகம் செய்தனர். முன்பதிவு துவங்கிய நிலையில், நாள் ஒன்றுக்கு 200 பதிவுகள் நடப்பதாக, சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X