பெண் காவலர்களுக்கு ஈஷா சத்குரு பாராட்டு

Added : ஆக 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தொண்டாமுத்துார் : ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டு பெண் காவலர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டுதெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் காவலராக பணிபுரியும் பிரவீனா ஏழு ஆண்டுகளாகவும், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பெண் காவலர் அமீனா நான்கு ஆண்டுகளாகவும், 'ஜீவ
பெண் காவலர்களுக்கு  ஈஷா சத்குரு பாராட்டு



தொண்டாமுத்துார் : ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டு பெண் காவலர்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டுதெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் காவலராக பணிபுரியும் பிரவீனா ஏழு ஆண்டுகளாகவும், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பெண் காவலர் அமீனா நான்கு ஆண்டுகளாகவும், 'ஜீவ சாந்தி' என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, இறந்த ஆதரவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவையை செய்து வருகின்றனர்.இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிக்கையில், 'பிரவீனாவுக்கும், அமீனாவுக்கும் வணக்கம்; துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போருக்கு கண்ணியம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் உங்களது கருணைமிக்க அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறோம். உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது' என, பாராட்டிஉள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swamy - chennai,இந்தியா
21-ஆக-202209:42:10 IST Report Abuse
swamy மிக மிக நன்று...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-ஆக-202207:06:26 IST Report Abuse
NicoleThomson வணக்கங்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஆக-202206:34:03 IST Report Abuse
Girija ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X