ஹிமாச்சலில் கன மழை: 22 பேர் பலி

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | |
Advertisement
சிம்லா-ஹிமாச்சல பிரதேசத்தில் மிக பலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 22 பேர் உயிரிழந்துள்ளனர்; 6 பேரை காணவில்லை.ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு, மிக பலத்த மழை பெய்துள்ளது.வரும் 28ம் தேதி வரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிம்லா-ஹிமாச்சல பிரதேசத்தில் மிக பலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 22 பேர் உயிரிழந்துள்ளனர்; 6 பேரை காணவில்லை.



latest tamil news



ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு, மிக பலத்த மழை பெய்துள்ளது.

வரும் 28ம் தேதி வரை மாநிலத்தில் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.நேற்று முன்தினம் பெய்த மழையால், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன; 22 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
காணவில்லைநிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.இதற்கிடையே, ஹாமிர்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தத்தளித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.காங்க்ரா மாவட்டத்தில் சக்கி அருகே ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஜோகிந்தர் நகர் - பதான்கோட் மார்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தப் பாலம் பாதுகாப்பற்றதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இரங்கல்

வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு, முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை வேகப்படுத்தும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பா மாவட்டத்தில் பேனட் கிராமத்தில், வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு சிறுமி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கிராமத்தில் இருந்து அரை கி.மீ., தொலைவில், அந்தச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மாவட்டத்தில், கோஹார் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.காங்க்ரா மற்றும் சிம்லாவில் நடந்த இரண்டு சம்பவங்களில், 9 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



உத்தரகண்டிலும் பலத்த மழை

உத்தரகண்டின் ராய்புர் - குமல்டா பகுதியில் நேற்று அதிகாலையில் மிக பலத்த மழை பெய்தது. இதனால், அங்குள்ள சில கிராமங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். சாங்க் நதியில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஒரு பாலம் இடிந்து விழுந்தது.சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற முசோரியில் உள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணியர் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.எதிர்பாராத இந்த திடீர் மழையில், ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலை, ரிஷிகேஷ் - கங்கோத்திரி நெடுஞ்சாலை உட்பட பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X