'ஸ்மார்ட் சிட்டி' முறைகேடுகள் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் என அழைக்கப்படும், 'சீர்மிகு நகரம்' திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையிலான ஒரு நபர் குழு, நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தது.மத்திய அரசின் நிதியுதவியுடன், 2015 ஜூன் 25ம் தேதி நாடு முழுதும், 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 'சீர்மிகு
ஸ்மார்ட் சிட்டி,  முறைகேடுகள்,  விசாரணை அறிக்கை, சமர்ப்பிப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் என அழைக்கப்படும், 'சீர்மிகு நகரம்' திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையிலான ஒரு நபர் குழு, நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தது.

மத்திய அரசின் நிதியுதவியுடன், 2015 ஜூன் 25ம் தேதி நாடு முழுதும், 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 'சீர்மிகு நகரம்' திட்டம் துவக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நகரங்களில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, நகருக்கு, 490 கோடி ரூபாய் வீதம், 5,390 கோடி ரூபாய், மத்திய அரசு ஒதுக்கியது.


latest tamil news



இதில், 3,969 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இன்னும், 1,421 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.மாநில அரசு, நகருக்கு தலா 500 கோடி ரூபாய் வீதம், 5,500 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில், 4,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இன்னும், 1,500 கோடி ரூபாய் தரப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட 11 நகரங்களில், 644 திட்டங்களை செயல்படுத்த, 10 ஆயிரத்து 651 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில், 257 திட்டங்கள், 2,328 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டன. அடுத்து, 7,947.50 கோடி ரூபாய் மதிப்பில், 339 திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

மீதமுள்ள பணிகளுக்கு, 'டெண்டர்' மற்றும் திட்ட அறிக்கை, தயாரிப்பு நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மழையில், சென்னை நகரம் மிதந்தது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர், 'சீர்மிகு திட்டப் பணிகளை முறையாக செய்யாததே, இதற்கு காரணம். திட்டச் செயல்பாடு குறித்து விசாரிக்க, ஒரு விசாரணைக் குழு அமைக்க போகிறோம்' என்றார்.அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட, 200 பக்க அறிக்கையை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம், டேவிதார் வழங்கினார். தலைமைச் செயலர் இறையன்பு உடனிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஆக-202207:02:49 IST Report Abuse
Kasimani Baskaran ஒருவர் குழு என்பது அகராதியிலேயே இல்லாதது.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஆக-202207:00:53 IST Report Abuse
Bhaskaran அப்படியே வேலூர் மாநகராட்சி செயல்பாடு களை ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X