அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தாத்தா, பேரன் பலி

Added : ஆக 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டை கிராமத்தில் தோட்டத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த பேரன் மோகனிஷ் 9, அவரை காப்பாற்ற முயன்ற தாத்தா கணேசன் 55, மின்சாரம் தாக்கி பலியாயினர்.விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியாபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது பேரன் மோகனிஷ் உட்பட நான்கு பேர் கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள அவர்களின்
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தாத்தா, பேரன் பலிகமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டை கிராமத்தில் தோட்டத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த பேரன் மோகனிஷ் 9, அவரை காப்பாற்ற முயன்ற தாத்தா கணேசன் 55, மின்சாரம் தாக்கி பலியாயினர்.விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியாபட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது பேரன் மோகனிஷ் உட்பட நான்கு பேர் கீழமுடி மன்னார்கோட்டையில் உள்ள அவர்களின் தோட்டத்திற்கு நேற்று வந்தனர்.

அங்கு பலத்த காற்றால் கீழே அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை கவனிக்காமல் மோகனிஷ் மிதித்தார்.உடனடியாக மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார். பதறியடித்து பேரனை காப்பாற்ற முயன்ற தாத்தா கணேசன் மீதும் மின்சாரம் தாக்கியது. இருவரும் அங்கேயே பலியாயினர். இதனை பார்த்த உடனிருந்த உறவினர்கள் சுப்புராஜ், மணி மயக்கமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஆக-202207:44:48 IST Report Abuse
Sriram V What action vidiyal Arasu taken against EB officials? Why there's no technology to monitor such short circuit? Whether electricity minister will resign for negligence
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X