பாக்கி தொகை பட்டுவாடா மின்சாரம் வாங்க தடை நீக்கம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சென்னை : பாக்கித் தொகை ௭௦ கோடி ரூபாயை, தமிழக மின் வாரியம் செலுத்திய தால், மின் கொள்முதலுக்கான தடை நீக்கப்பட்டு உள்ளது.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சாரம் வாங்கப்படும்போது அதற்கான பணம், மின் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு விரைவாகவே வழங்கப்படுகிறது. அந்நிறுவனங்கள், மின்சார சந்தையை நிர்வகிக்கும் மத்திய மின் துறையின் கீழ் இயங்கும், 'பவர் சிஸ்டம்



சென்னை : பாக்கித் தொகை ௭௦ கோடி ரூபாயை, தமிழக மின் வாரியம் செலுத்திய தால், மின் கொள்முதலுக்கான தடை நீக்கப்பட்டு உள்ளது.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சாரம் வாங்கப்படும்போது அதற்கான பணம், மின் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு விரைவாகவே வழங்கப்படுகிறது.

அந்நிறுவனங்கள், மின்சார சந்தையை நிர்வகிக்கும் மத்திய மின் துறையின் கீழ் இயங்கும், 'பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம் நிலுவை தொகை குறித்து சரியான விபரங்களை அளிப்பதில்லை.இதனால் தமிழக மின் வாரியம், 926 கோடி ரூபாய் நிலுவை வைத்திருப்பதாக கருதி பவர் சிஸ்டம் நிறுவனம், இம்மாதம் 19ம் தேதி முதல் மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க, விற்க தடை விதித்துள்ளது.

ஆனால், 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவை தொகை இருந்தது. எனவே, இதுவரை மின் சப்ளை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான விபரங்கள் அனைத்தும், பவர் சிஸ்டம் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. நிலுவை தொகையாக இருந்த, 70 கோடி ரூபாயும், 35 நிறுவங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மின்சாரம் வாங்க, விற்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X