வங்கி கொள்ளை விவகாரம் கோவையை சேர்ந்தவர் கைது

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சென்னை : தனியார் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை உருக்குவதற்கு உதவியாக இருந்த, கோவையைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா, 33, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.சென்னை, அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் 'பெடரல்' வங்கியின் தங்க நகை பிரிவான 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்படுகிறது.அங்கு 13ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து, கத்தியை
வங்கி கொள்ளை விவகாரம்  கோவையை சேர்ந்தவர் கைது



சென்னை : தனியார் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை உருக்குவதற்கு உதவியாக இருந்த, கோவையைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா, 33, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.சென்னை, அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் 'பெடரல்' வங்கியின் தங்க நகை பிரிவான 'பெட் பாங்க்' என்ற கிளை செயல்படுகிறது.அங்கு 13ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி, 31.7 கிலோ நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.இச்சம்பவம் தொடர்பாக, சென்னை பாடியை சேர்ந்த முருகன், 29, வில்லிவாக்கம் சந்தோஷ், 30, பாலாஜி, 28, அம்பத்துார் சூர்யபிரகாஷ், 29, தி.நகர் செந்தில்குமரன், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்;

மேலும் சிலரை தேடி வருகின்றனர்.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டில் வைத்திருந்ததாக, காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், 52, கைது செய்யப்பட்டு, நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.கொள்ளையர்கள் நகைகளை உருக்க முடிவு செய்து, அதற்காக சிறிய கருவியை வாங்கி உள்ளனர். அதற்காக, குரோம்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினர். அங்கு நகைகளை உருக்கும்போது அதிகமாக புகை கிளம்பியதால் பயந்து, நகையுடன் தப்பி உள்ளனர்.இந்தக் கருவியை வாங்கவும், நகைகளை உருக்கவும் உதவியாக இருந்த, கோவையைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்த நகை உருக்கும் கருவியையும் பறிமுதல் செய்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X