விநாயகர் சிலை கரைப்பு; வழிமுறைகள் வெளியீடு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு tnpcb.gov.in என்ற இணையதளத்தில், வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.களிமண்ணால் செய்யப்பட்ட



சென்னை : தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு tnpcb.gov.in என்ற இணையதளத்தில், வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மட்டுமே, நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு, மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே, சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

வண்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் சிலைகளை அழகுபடுத்த, வண்ணப்பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் விநாயகர் சிலைகள், மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X