வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

Added : ஆக 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : தனியார் வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை, வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையில், லஷ்மி விலாஸ் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.வங்கியில் கடந்த 1ம் தேதி வழக்கம் போல், காலை பணிக்கு வந்த ஊழியர்கள், வங்கியை திறந்து, அறைகளை ஆய்வு செய்தனர். அப்போது, பணம் மற்றும் நகைகள் இருந்த பெட்டகம்
வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி


சென்னை : தனியார் வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை, வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையில், லஷ்மி விலாஸ் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.வங்கியில் கடந்த 1ம் தேதி வழக்கம் போல், காலை பணிக்கு வந்த ஊழியர்கள், வங்கியை திறந்து, அறைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, பணம் மற்றும் நகைகள் இருந்த பெட்டகம் அறையில் இருந்த சுவரில் துளையிட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பணப்பெட்டகம் வைத்திருந்த அறையில் சென்று பார்த்த போது அங்கிருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மற்றும் 10 ரூபாய் சில்லரை நாணயங்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும், அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த, 7 கோடி ரூபாய் தப்பியது தெரிய வந்தது.வில்லிவாக்கம் போலீசார் விசாரணையில் வங்கி அமைந்துள்ள கட்டடம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, அதேபகுதியில் வசிக்கும், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரஹீம் மாலிக், 25, என்பவர்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran V - Chennai,இந்தியா
21-ஆக-202218:06:47 IST Report Abuse
Ramachandran V இப்போதெல்லாம் திருடர்களும் செக்யூரிட்டி வைத்துக்கொள்கிறார்கள்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஆக-202207:28:15 IST Report Abuse
Girija கடந்த 1 ம் தேதி திருட்டு போனதாம் தகவல் இப்பதான் வெளியே வருகிறது .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஆக-202207:10:40 IST Report Abuse
Bhaskaran யாரேனும் காவல்துறை ஆசாமி துணை இருக்காங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X