மயில்வேல் முருகன் கோயிலில் செப். 1 ல் கும்பாபிஷேகம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில் செப்., 1ல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.இக்கோயிலில் ராஜகோபுரம், சஷ்டி மண்டபம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. ஆக., 28 மாலை 6:00 மணி முதல் கணபதி பூஜை, யஜமான சங்கல்பம், கலச பூஜை, வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், முதல் கால பூஜை நடக்கின்றன. ஆக., 29 காலை 8:00 மணிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.



மதுரை-மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில் செப்., 1ல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.இக்கோயிலில் ராஜகோபுரம், சஷ்டி மண்டபம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. ஆக., 28 மாலை 6:00 மணி முதல் கணபதி பூஜை, யஜமான சங்கல்பம், கலச பூஜை, வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், முதல் கால பூஜை நடக்கின்றன. ஆக., 29 காலை 8:00 மணிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஆக., 30ல் நான்காம், ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள், ஆக., 31ல் ஆறாம், ஏழாம் யாகசாலை பூஜைகள், மருந்து சாத்துதல் நடக்கிறது.செப்., 1 காலை 6:00 மணிக்கு பூர்ணாஹூதி, வேதபாராயணம் மகா தீபாராதனை, யாத்ராதானம் நடக்கிறது. பின் காலை 8:00 முதல் 9:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11:15 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X