மைதானம், பூங்கா பணிகள் திடீர் நிறுத்தம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
திருப்போரூர் : கேளம்பாக்கத்தில் இரு இடங்களில் துவங்கப்பட்ட பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, திடீரென நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், கே.எஸ்.எஸ்., நகர் மற்றும் கமலம் நகரில், விளையாட்டு மைதானம், பூங்கா மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன.இதற்காக அப்பகுதி ஏரியிலிருந்து மண் எடுத்து வந்து
மைதானம், பூங்கா பணிகள் திடீர் நிறுத்தம்


திருப்போரூர் : கேளம்பாக்கத்தில் இரு இடங்களில் துவங்கப்பட்ட பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, திடீரென நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், கே.எஸ்.எஸ்., நகர் மற்றும் கமலம் நகரில், விளையாட்டு மைதானம், பூங்கா மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன.இதற்காக அப்பகுதி ஏரியிலிருந்து மண் எடுத்து வந்து கொட்டப்பட்டு, சமன் செய்யும் பணிகள் நடந்தன. திடீரென நிறுத்தப்பட்டு, பணிகள் அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கே.எஸ்.எஸ்., நகர் மக்கள் கூறியதாவது:கேளம்பாக்கம் ஊராட்சி, கே.எஸ்.எஸ்., நகரில் 500 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள விளையாட்டு மைதானம் குண்டும் குழியுமாகவும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியும் கிடந்தது.இதை சீரமைத்து விளையாட்டு உபகரணம், பூங்கா அமைக்க கோரிக்கை விடுத்தோம். ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது.தொடர்ந்து, பூங்காவில் சமன்படுத்தப்பட்டு பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. திடீரென பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் நலன் சார்ந்த பணியான விளையாட்டுப் பூங்காவை மேம்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கமலம் நகர் மக்கள் கூறியதாவது:கேளம்பாக்கம் ஊராட்சி கமலம் நகரில் 250 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க காலி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.சிறியோர் முதல் பெரியோர் வரை, விளையாடுவதற்கும், நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் இயலாத நிலை உள்ளதாக, ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினோம்.மேற்கண்ட காலி இடத்தை உயர்மட்டமாக்கி, சிறுவர் பூங்கா அமைக்க முடிவு செய்து, ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கியது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் குழப்பமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.துவங்கப்பட்ட பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது குறித்து, பெயர் குறிப்பிடாத அரசு அலுவலர் ஒருவர் கூறியதாவது:பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, மக்களுக்கு உபயோகமானது தான் என்றாலும், அரசு அனுமதியின்றி, இதே பகுதியில் மண் எடுத்து, பூங்காவில் கொட்டப்பட்டது.அனுமதி இல்லாமல் மண் எடுத்ததால், பிரச்னை வருமோ என, கிராம நிர்வாக அலுவலர், மண் எடுக்கத் தடை விதித்தார்.இதனால், விளையாட்டு மைதானம், பூங்காவுக்கு மண் கொட்டி பணிகள் செய்ய முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X