சேதம் அடைந்த மின் கம்பம் மாற்றம்| Dinamalar

சேதம் அடைந்த மின் கம்பம் மாற்றம்

Added : ஆக 21, 2022 | |
காஞ்சிபுரம் : நம் நாளிதழிலில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஓரிக்கை ரத்தினம் நகர் பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் மற்றும் அப்பகுதி வீட்டின் வாசலில் தாழ் வாக சென்ற மின் கம்பி மாற்றப்பட்டது.காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை டி.வி. ரத்தினம் நகர் தணிகை வேலன் தெரு வில் உள்ள மின் கம்பம் சேதம் அடைந்திருந்தது. மேலும் மின் கம்பி ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாழ்ந்து சென்ற



காஞ்சிபுரம் : நம் நாளிதழிலில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஓரிக்கை ரத்தினம் நகர் பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பம் மற்றும் அப்பகுதி வீட்டின் வாசலில் தாழ் வாக சென்ற மின் கம்பி மாற்றப்பட்டது.காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை டி.வி. ரத்தினம் நகர் தணிகை வேலன் தெரு வில் உள்ள மின் கம்பம் சேதம் அடைந்திருந்தது. மேலும் மின் கம்பி ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாழ்ந்து சென்ற நிலையில் இருந்ததால் கயிறால் இழுத்து கட்டியி ருந்தனர்.



இதனால் மழை காலத்தில் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை இருந்தாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்னை இருப்பதாகவும் இதற்கு தீர்வு ஏற்பட வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதை தொடந்து நம் நாளிதழில் 18 ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மின் வாரி யம் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்தனர். தாழ்வாக சென்ற மின் கம்பியை இழுத்து கட்டியுள்ளனர்.இதன் வாயிலாக அப் பகுதியில் நீண்ட காலமாக இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X