ஜி.எஸ்.டி., சாலையில் கழிவு நீர்மூச்சு முட்டும் அளவுக்கு துர்நாற்றம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
மறைமலை நகர் : சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை சகித்து கொள்ள முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சிங்கப்பெருமாள் கோவில், பஜார் வீதியான மண்டபத்தெரு ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு, அனுமந்தபுரம் சாலை வரையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்த சாலைகளை தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த
ஜி.எஸ்.டி., சாலையில் கழிவு நீர்மூச்சு முட்டும் அளவுக்கு துர்நாற்றம்



மறைமலை நகர் : சிங்கப்பெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரால் ஏற்படும் துர்நாற்றத்தை சகித்து கொள்ள முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சிங்கப்பெருமாள் கோவில், பஜார் வீதியான மண்டபத்தெரு ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு, அனுமந்தபுரம் சாலை வரையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்த சாலைகளை தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தினம் பயன்படுத்துகின்றனர்.

இப்பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால், அங்கிருந்த பழைய கழிவு நீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. இதனால், மண்டபத்தெரு சாலையில், கழிவு நீர் வழிந்தோடுகிறது.அனுமந்தபுரம் சாலை சந்திப்பில், கழிவு நீர் வெளியேற வழியின்றி குட்டை போல் தேங்கி நிற்கிறது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.பொதுமக்கள் கூறியதாவது:பேருந்து நிலையம் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் பள்ளிகளுக்கு, மேற்கண்ட சாலைகள் வழியாக தான் செல்ல வேண்டும்.இந்த சாலையில் 50 மீட்டரில் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், கோவிலுக்கு வரும் பக்தர்களும் சுளிக்கின்றனர்.சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கழிவு நீரை அகற்றி, முறையாக செல்ல, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X