கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விமரிசை

Added : ஆக 21, 2022 | |
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கியது.மாமல்லபுரத்தில், பஜனை கோவில் எனும் ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.இக்கோவிலில், 10 நாட்கள் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று முன்தினம் இரவு துவங்கியது.சுவாமிக்கு, அபிஷேக, திருமஞ்சன வழிபாடு தொடர்ந்து, கிருஷ்ணர், வாசுதேவ கண்ணன்


மாமல்லபுரம் : மாமல்லபுரம் நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கியது.மாமல்லபுரத்தில், பஜனை கோவில் எனும் ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.இக்கோவிலில், 10 நாட்கள் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று முன்தினம் இரவு துவங்கியது.சுவாமிக்கு, அபிஷேக, திருமஞ்சன வழிபாடு தொடர்ந்து, கிருஷ்ணர், வாசுதேவ கண்ணன் ஆயர்பாடியில் எழுந்தருளும் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆக., 29ம் தேதி வரை, தினமும் மாலை, சுவாமிக்கு அபிஷேகம், திருமஞ்சனம் நடத்தி, சிறப்பு சேவை அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 30ம் தேதி மாலை, உறியடி உற்சவம் நடக்கிறது.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி வேணுநாத பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 76ம் ஆண்டு உற்சவமாக, காலை, சுவாமிக்கு திருமஞ்சன வழிபாடு நடந்தது.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பதில் உள்ள கண்ணபிரான், திரவுபதி அம்மன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணரை அலங்கரித்து வழிபாடு, பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் கண்ணபிரான், திரவுபதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X