சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
புதுச்சேரி, : புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.புதுச்சேரிக்கு, வார இறுதி நாட்களில் வெளி மநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.குறிப்பாக கடந்த வாரம் சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், புதுச்சேரியின் பிரதான சாலைகளில் மூன்று
சுற்றுலா பயணிகள் குவிந்ததால்  புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்



புதுச்சேரி, : புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.புதுச்சேரிக்கு, வார இறுதி நாட்களில் வெளி மநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.குறிப்பாக கடந்த வாரம் சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதனால், புதுச்சேரியின் பிரதான சாலைகளில் மூன்று நாட்கள் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.கடந்த 16ம் தேதிக்கு பிறகு சற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்று கிழமை என்பதால், இந்த வாரமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி கடற்கரை சாலை, படகுக் குழாம் அமைந்துள்ள கடலுார் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கட்டுக்கடங்காத போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X