பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம்| Dinamalar

பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம்

Added : ஆக 21, 2022 | |
புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் வில்லியனுாரில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது.இதுகுறித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., உதவி பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருடன் இணைந்து நாளை 22 மற்றும் 23ம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் வில்லியனுாரில்



புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் வில்லியனுாரில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது.இதுகுறித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., உதவி பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருடன் இணைந்து நாளை 22 மற்றும் 23ம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் வில்லியனுாரில் சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நடத்துகிறது.முகாமில் இலவசமாக புதிய பிரீபெய்ட் சிம் கார்டு விற்பனை மற்றும் நெட் ஒர்க் மொபைல் எண்களை எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் எண்ணாக மாற்றிக் கொள்ளும் சேவை வழங்கப்பட உள்ளது. முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., 4ஜி சிம் கார்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிம் கார்டு மூலம் 45 நாட்களுக்கு அனைத்து நெட் ஒர்க்களிலும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜி.பி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., இலவசம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X