கவுன்சிலில் டாக்டர் பதிவு நிறுத்தம்: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு| Dinamalar

கவுன்சிலில் டாக்டர் பதிவு நிறுத்தம்: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

Added : ஆக 21, 2022 | |
மருமகனுக்கு சொத்துக்கள் கிடைப்பதற்காக நோயாளி குறித்து பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கியதற்காக டாக்டர் ஒருவரின் பதிவை நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் 66 வயதான பிச்சுமணி என்பவர் பல்வேறு உடல் நல பிரச்னைகளுக்காக 2015 செப்டம்பர் 27ல் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு

மருமகனுக்கு சொத்துக்கள் கிடைப்பதற்காக நோயாளி குறித்து பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கியதற்காக டாக்டர் ஒருவரின் பதிவை நீக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் 66 வயதான பிச்சுமணி என்பவர் பல்வேறு உடல் நல பிரச்னைகளுக்காக 2015 செப்டம்பர் 27ல் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னும் பலனளிக்காமல் அக்டோபர் 11ல் இறந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் பிச்சுமணி இருந்தபோது சுய நினைவுடன் படுக்கையில் இருப்பதாக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர் சான்றிதழ் வழங்கினார்.அதன் அடிப்படையில் பிச்சுமணிக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 19 சொத்துக்கள் அவரது மகனும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மருமகனுமான சக்திவேல் என்பவருக்கு 'செட்டில்மென்ட்' செய்யப்பட்டது. பிச்சுமணியின் வீட்டில் வைத்து பத்திரப்பதிவு நடந்ததாக சார் பதிவாளரும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தன் தந்தைக்கு தெரியாமல் மோசடி நடந்திருப்பதாக பிச்சுமணியின் மகள் ஸ்ரீசுபிதா என்பவர் போலீசில் புகார் அளித்தார். பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கியதாக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தேசிய மருத்துவ கமிஷனிலும் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடந்து ராதாகிருஷ்ணனின் மருத்துவர் பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கி 2021 மே மாதம் தமிழக மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: நோயாளியின் உண்மை நிலை தெரிந்தும் வேண்டுமென்றே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சொந்த மருமகனுக்கு சொத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் செயல் மோசடித்தனமானது; கடுமையானது. மனுதாரர் தரப்பு வாதத்தில் தகுதி இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X