1,827 பேருக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.அதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, கொங்கணாபுரம், சமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள, 5 அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 652 மாணவ, மாணவியருக்கு, 33 லட்சத்து, 17 ஆயிரத்து, 553 ரூபாய் மதிப்பில், சைக்கிள்


சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.
அதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, கொங்கணாபுரம், சமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள, 5 அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 652 மாணவ, மாணவியருக்கு, 33 லட்சத்து, 17 ஆயிரத்து, 553 ரூபாய் மதிப்பில், சைக்கிள் வழங்கி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், கல்வி துறைக்கு, 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். அத்துறையில், 14 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிகளில் புது கட்டடங்கள் கட்டுவதற்கு, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தி.மு.க.,வின், மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வ கணபதி, சிவலிங்கம், கொங்கணாபுரம் ஒன்றிய செயலர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 11 பள்ளி களில் படிக்கும், 1,175 பேருக்கு, 59 லட்சத்து, 80 ஆயிரத்து, 341 ரூபாய் மதிப்பில், விலையில்லா சைக்கிள்களை, அமைச்சர் நேரு வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X