பயிற்சி போலீஸ்காரர் உள்பட ௨ பேர் விபத்தில் உயிரிழப்பு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
பைக்குகள் மோதிக்கொண்டதில் பயிற்சி போலீஸ்காரர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.வாழப்பாடி, புழுதிக்குட்டை அருகே கீரைப்பட்டியை சேர்ந்த, கோவிந்தசாமி மகன் கிருஷ்ணன், 27. போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தர்மபுரியில் பயிற்சியில் இருந்தார். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த கரிராமன் மகன் மணிகண்டன், 28. இருவரும், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வாழப்பாடியில் இருந்து கீரைப்பட்டி


பைக்குகள் மோதிக்கொண்டதில் பயிற்சி போலீஸ்காரர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
வாழப்பாடி, புழுதிக்குட்டை அருகே கீரைப்
பட்டியை சேர்ந்த, கோவிந்தசாமி மகன் கிருஷ்ணன், 27. போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தர்மபுரியில் பயிற்சியில் இருந்தார். இவரது நண்பர், அதே
பகுதியை சேர்ந்த கரிராமன் மகன் மணிகண்டன், 28.
இருவரும், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வாழப்பாடியில் இருந்து கீரைப்பட்டி நோக்கி, 'பஜாஜ் சிடி - 100' பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். கீரைப்பட்டி அருகே சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சகாதேவன் மகன் அர்ஜுனன், 26, ஓட்டிச்சென்ற, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக் மீது மோதியது.
அதில், 3 பேரும் படுகாயம் அடைய, மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் மணிகண்டன் உயிரிழந்தார். அர்ஜுனன் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும், கிருஷ்ணன் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கிருஷ்ணனும் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X