மாவட்டத்தில் லட்சம் பனை விதை நடவு திட்டம் தொடக்கம்| Dinamalar

மாவட்டத்தில் லட்சம் பனை விதை நடவு திட்டம் தொடக்கம்

Added : ஆக 21, 2022 | |
சேலம் மாவட்டம், ஓமலுார், வெள்ளக்கல் பட்டியில், 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம், நேற்று தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி தொடங்கி வைத்தனர். பின், அமைச்சர் நேரு பேசியதாவது: இந்த இயக்கத்தில் இன்று முதல், செப்., 2 வரை துாய்மை காவலர், பணியாளர், தன்னார்வலர், தொண்டு நிறுவனத்தினர் இணைந்து குடியிருப்பு, பொது இடங்களில் துாய்மையை மேம்படுத்தல், வீடுதோறும் மட்கும்,


சேலம் மாவட்டம், ஓமலுார், வெள்ளக்கல் பட்டியில், 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம், நேற்று தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி தொடங்கி வைத்தனர்.
பின், அமைச்சர் நேரு பேசியதாவது: இந்த இயக்கத்தில் இன்று முதல், செப்., 2 வரை துாய்மை காவலர், பணியாளர், தன்னார்வலர், தொண்டு நிறுவனத்தினர் இணைந்து குடியிருப்பு, பொது இடங்களில் துாய்மையை மேம்படுத்தல், வீடுதோறும் மட்கும், மட்கா குப்பை, நெகிழிகளை பாதுகாப்பாக அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
வரும், 27 முதல் செப்., 2 வரை, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு குடிநீர், சுகாதாரம், திட, திரவ கழிவு மேலாண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை கள ஆய்வுக்கு அழைத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
செப்., 3 முதல், 16 வரை, மகளிர் குழு, சமூக நலத்துறை, குடும்ப நலத்துறை மூலம் அரசு, தனியார் மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் குப்பையை தரம்பிரித்தல், குடிநீர் சோதனை செய்தல், 'ஜல்ஜீவன்' திட்டத்தில் மக்கள் பங்களிப்பு போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தல்; செப்., 17 முதல், 23 வரை; 24 முதல், அக்., 1வரை, மஞ்சப்பை பயன்பாடு, முருங்கை, பப்பாளி போன்ற வைட்டமின் சத்து மரங்களை நடவு செய்தல், பசுமை தோட்டம் அமைத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சீனிவாச நகரில் மாவட்டம் முழுதும் லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை, இரு அமைச்சர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் தாமதத்தால் அவதி
காலை, 9:00 மணிக்கு, அமைச்சர் நேரு தலைமையில் விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிகாரிகள், துாய்மை பணியாளர், மக்கள், 8:00 மணி முதலே குவிந்தனர். ஆனால் மதியம், 12:00 மணி வரை அமைச்சர் வராததால் பெண்கள், அதிகாரிகள் வெயிலில் நிற்க முடியாமல் நிழலை தேடி ஒதுங்கினர்.
ஆரத்தி, கும்ப மரியாதை வழங்க தயாராக வந்த பெண்கள், மூதாட்டிகள், நிற்க முடியாமல் அவதிப்பட்டனர். கட்சியினர் காத்துக்கிடந்தனர்.
ஒருவழியாக, 12:30 மணிக்கு, அமைச்சர் நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபானி, கலெக்டர் கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் விழா மேடைக்கு வந்தனர். சேலத்தில் உள்ள பள்ளி விழாவுக்கு சென்றுவிட்டு வந்த தால் தாமதம் ஏற்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X