இருதரப்பினர் தகராறில் 4 பேர் அதிரடி கைது

Added : ஆக 21, 2022 | |
Advertisement
ஓசூர், சானசந்திரம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி, 29, சக்திவேல், 28, சேகர், 26. இவர்கள் மூவரும், கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை, அப்பகுதியிலுள்ள அறையில் வைத்திருந்தனர். கடந்த, 18ல் இரவு, சானசந்திரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக், 26, என்பவர், கொத்தனார்கள் பொருட்கள் வைத்திருந்த அறைக்கு எதிரே அமர்ந்திருந்தார். அப்போது


ஓசூர், சானசந்திரம் வ.உ.சி., நகரை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி, 29, சக்திவேல், 28, சேகர், 26. இவர்கள் மூவரும், கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். தங்களது தொழிலுக்கு தேவையான பொருட்களை, அப்பகுதியிலுள்ள அறையில்
வைத்திருந்தனர்.
கடந்த, 18ல் இரவு, சானசந்திரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக், 26, என்பவர், கொத்தனார்கள் பொருட்கள் வைத்திருந்த அறைக்கு எதிரே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கொத்தனார் சத்திய
மூர்த்தி, அவரை அங்கு உட்கார வேண்டாம் என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில், கார்த்திக் வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி, சக்திவேல், சேகர் ஆகியோர், அங்கிருந்த கார்த்திக் அண்ணன் சக்திவேலிடம் தகராறு செய்து செங்கலால் தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் புகார் படி, சத்தியமூர்த்தி, சக்தி
வேல், சேகர் ஆகிய மூவரை, ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அதேபோல், சத்தியமூர்த்தி தன்னை தாக்கியதாக கொடுத்த புகார்படி, கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X