குடியிருப்பு பகுதியில் குரங்கு தொல்லை

Added : ஆக 21, 2022 | |
Advertisement
கால்வாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகே உள்ள சி.எஸ்.செட்டி தெரு - சி.என். அண்ணாதுரை தெருவிற்கு இடையே உள்ள குறுக்கு தெருவில் கான்கிரீட் மேல்தளத்துடன் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. சாலையை ஒட்டியுள்ள இக்கால்வாயின் மேல்தள கான்கிரீட் பகுதியில் பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில், இரு இடங்களில் கால்வாயின்
குடியிருப்பு பகுதியில் குரங்கு தொல்லை



கால்வாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?

சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகே உள்ள சி.எஸ்.செட்டி தெரு - சி.என். அண்ணாதுரை தெருவிற்கு இடையே உள்ள குறுக்கு தெருவில் கான்கிரீட் மேல்தளத்துடன் கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்ளது. சாலையை ஒட்டியுள்ள இக்கால்வாயின் மேல்தள கான்கிரீட் பகுதியில் பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில், இரு இடங்களில் கால்வாயின் மேல்தள கான்கிரீட் பகுதி சேதமடைந்து உடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் நடந்து செல்வோர் தவறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு.முத்துகுமார், சின்ன காஞ்சிபுரம்.-------------உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா?காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நீர்தேக்கதொட்டி, மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலம் அமைந்துள்ள மும்முனை சாலை சந்திப்பு பகுதி உள்ளது. இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால், சின்ன காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர் கால்வாய் சிறுபாலத்தை கடந்து திருக்காலிமேடு பகுதிக்குள் நுழையும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நடந்து செல்வோரும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, மும்முனை சாலை சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எம்.சந்தோஷ், காஞ்சிபுரம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X