'கருத்து கந்தசாமி'களை களை எடுப்பதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்!

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேச்சு: நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது, ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக, இந்திய ராணுவத்துக்கு எதிராக, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக, ஏதாவது நிறுவனம் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசத்திற்கு எதிரான கருத்துக்களை
முருகன், சீமான், வைத்திலிங்கம், அண்ணாமலை

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேச்சு: நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது, ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக, இந்திய ராணுவத்துக்கு எதிராக, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக, ஏதாவது நிறுவனம் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் எந்த, 'யு டியூப்' சேனலாக இருந்தாலும், எந்த சமூக ஊடகமாக இருந்தாலும், அவை தடை செய்யப்படும்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டு மானாலும் எழுதலாம், பேசலாம் என்ற வரைமுறையே இல்லாம போயிடுச்சு... 'கருத்து கந்தசாமி'களை களை எடுப்பதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்!


மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் பேட்டி: உக்ரைனில் படித்த மாணவர்கள் விஷயத்தில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. உக்ரைன் பாடப்பிரிவு போல் உள்ள மற்ற நாடுகளில், அந்த மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அடுத்த வாரம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கும் போது, இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.

மாணவர்களை உக்ரைன்ல இருந்து மீட்க, தமிழக அரசு சார்புல குழுவெல்லாம் அமைத்து, 'படம்' காட்டுனீங்களே... அதே மாதிரி, இப்பவும் ஏதாவது செய்யாம, மத்திய அரசு பக்கம் பந்தை திருப்புறீங்களே!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை, நிதியமைச்சர் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? இலவசம் என்பது ஒருவகையான லஞ்சம். இலவசங்களால், ஒரு புள்ளி அளவுக்கு கூட நாடு வளராது. விவசாயிகளை வாழ்நாள் முழுதும் பிச்சைக்காரர்களாக வைத்துக் கொண்டு, அவர்களுக்கு அவ்வப்போது, 2,000 ரூபாய் வழங்குவது எந்த வகையில் நியாயம்?

ரொம்ப சரியா சொன்னீங்க... இலவசங்கள் சோம்பேறிகளை உருவாக்குகிறது என்றால், அதில் மிகையில்லை!


அ.தி.மு.க., தேனி மாவட்ட செயலர் சையதுகான் பேட்டி: பழனிசாமி, தனக்கு பதவி ஆசை இல்லை எனவும், உழைக்காமல் கட்சியில் பொறுப்பு கேட்கும் பன்னீர்செல்வம், ஒரு துரோகி என்றும் கூறியுள்ளார். ஆனால், உண்மையிலேயே பழனிசாமி தான் துரோகி. சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்ற பழனிசாமி, அவருக்கு துரோகம் செய்தவர். ஆனால், ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்ட பிறகும், அவரிடம் திரும்ப பதவியை கொடுத்தவர் தான் பன்னீர்செல்வம்.

ஒருவேளை, ஜெயலலிதாவிடம் முதல்வர் பதவியை திரும்ப கொடுக்காம இருந்திருந்தால், பன்னீர்செல்வம் இன்று அ.தி.மு.க.,வில் இருந்திருப்பாரா?


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சு: பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடுக்கு சென்றுள்ளதை, சட்டப்படி சந்திப்போம். அ.தி.மு.க.,வுக்கு கூட்டு தலைமை தான் வேண்டும். பழனிசாமி பக்கம் சென்ற பொதுக் குழு உறுப்பினர்கள், எங்களை நோக்கி வருகின்றனர்.


latest tamil newsஅ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில், பா.ஜ., உள்ளிட்ட மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.உங்க கட்சி விவகாரத்தில் தலையிடுவதை தவிர, பா.ஜ.,வுக்கு வேறு வேலை இல்லை என நினைத்து விட்டீர்களா?


தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: 'துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், கொடூரமான செயல்' என, நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன், தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால், பொதுமக்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்ட அந்த சம்பவத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிக்கையின் முழு விபரங்களும் வெளியாகாமல், அவசரப்படுவது சரியா?


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி: 'பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் எந்த விதத்திலும் சமரசத்திற்கு வாய்ப்பில்லை' என, தமிழக முதல்வர் கூறியிருப்பது நல்லது தான். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., உடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,விற்கு குறைந்தபட்ச தகுதி கூட கிடையாது. அதை ஒப்புக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையா, முதல்வர் தேவைஇல்லாம உங்களை வம்புக்கு இழுக்கணுமா... இப்படி வாங்கி கட்டிக்கணுமா?


மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் எஸ்.வைத்தீஸ்வரன் அறிக்கை: குமரி மாவட்டம், தேங்காப்பட்டணத்தில், 2019ல் மீன்பிடி துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது. சரியான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இதுவரை, 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 'துறைமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்' என வலியுறுத்தி, மீனவர்கள் பலமுறை போராடியும், எந்த நடவடிக்கையும் இல்லை.

அங்குள்ள தங்கள் கட்சியினரை வச்சு, மாபெரும் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கலாமே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
: தமிழகத்தின் மின் தேவையில், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே, தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க, தமிழக அரசுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை, தமிழக அரசும், மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.

பிரிக்க முடியாதது எதுவோ' என கேள்வி கேட்டால், 'தி.மு.க., அரசும், மின் தடையும்' என சொல்லி விடலாம் போலிருக்குது!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஆக-202219:22:25 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ,,,,,
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
21-ஆக-202214:10:27 IST Report Abuse
Suppan "மின் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க, தமிழக அரசுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால்" இலவசங்களைக் கொடுத்து ஊழல்கள் பல புரிந்து மின் பகிர்மானக் கழகத்தை மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாக்கிவிட்டன இரண்டு கழகங்களும். மின்னுற்பத்தியாளர்கள் இளிச்சவாயர்கள் என்று இவ்வளவு காலம் நினைத்து விட்டனர். தமிழகத்தை இருளில் தள்ள காத்திருக்கின்றன. இரண்டு கழகங்களும் ஒழியும் நாள்தான் நல்ல நாள்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
21-ஆக-202213:56:55 IST Report Abuse
J. G. Muthuraj ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X