கித்வாய் மருத்துவமனை இயக்குனர் பணியை நீட்டிக்க வலியுறுத்தல்| Dinamalar

கித்வாய் மருத்துவமனை இயக்குனர் பணியை நீட்டிக்க வலியுறுத்தல்

Added : ஆக 21, 2022 | |
துமகூரு : கித்வாய் புற்று நோய் மருத்துவனை இயக்குனர் ராமசந்திராவை, பணியில் நீட்டிக்கும்படி இங்குள்ள டாக்டர்கள், ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.பெங்களூரின், கித்வாய் புற்று நோய் மருத்துவமனை, நோயாளிகளுக்கு மிகவும் உயர்தரமான சிகிச்சை அளிக்கும், நாட்டின் மிக சிறந்த மருத்துவமனை. வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும், சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். தினமும் 24 மணி
கித்வாய் மருத்துவமனை இயக்குனர் பணியை நீட்டிக்க வலியுறுத்தல்துமகூரு : கித்வாய் புற்று நோய் மருத்துவனை இயக்குனர் ராமசந்திராவை, பணியில் நீட்டிக்கும்படி இங்குள்ள டாக்டர்கள், ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.பெங்களூரின், கித்வாய் புற்று நோய் மருத்துவமனை, நோயாளிகளுக்கு மிகவும் உயர்தரமான சிகிச்சை அளிக்கும், நாட்டின் மிக சிறந்த மருத்துவமனை. வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும், சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.தினமும் 24 மணி நேரம் சிகிச்சை, ஆய்வகம், மருந்தகம் வசதி கிடைக்கிறது. ஏழைகளுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 'அம்ருத பார்மசி' திறக்கப்பட்டுள்ளது.இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில், 50 கோடி ரூபாய் செலவில் வெளி நோயாளிகள் பிரிவு கட்டப்பட்டுள்ளது. 12 ஹைடெக் அறுவை சிகிச்சை அறைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் 'பெட் ஸ்கேனிங்' கிடைக்கும். லேசர் தொழில்நுட்பம் கொண்ட சிகிச்சை வசதி உள்ளது.தற்போது கித்வாய் புற்று நோய் மருத்துவனை இயக்குனராக பணியாற்றும் ராமசந்திராவின் பதவி காலம், வரும் 28ல் முடிவடைகிறது. நான்கு ஆண்டுகளில், கித்வாய் மருத்துவமனையை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கிறார். குறுகிய காலத்தில் தரம் உயர்த்தினார். சர்வதேச அளவில் அங்கிகாரம் கிடைக்கச் செய்துள்ளார்.இவர் பதவிக்கு வந்த பின், கித்வாய் புற்று நோய் மருத்துவமனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நன்கொடையாளர்களின் உதவி, ஒத்துழைப்பு பெற்று, மருத்துவமனையின் நுழைவு வாசல் உட்பட, பழைய கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டது. சில புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.தற்போது கார்ப்பரேட் மருத்துவமனை போன்று மின்னுகிறது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களின் ஆயிரக்கணக்கான நோயாளிகள், சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பது தாமதம் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காணும் வகையில், விஜயபுரா, மாண்டியா, ஹாசன், கார்வார், மைசூரு, துமகூரு, ஹூப்பள்ளி நகரங்களில், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையின் கிளைகளை திறக்க, நடவடிக்கை எடுத்துள்ளார்.ஹூப்பள்ளியில் மருத்துவமனை கட்டடம் கட்டப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடித்து, சிகிச்சையளிக்கும் நோக்கில், 150 க்கும் மேற்பட்ட புற்றுநோய் கண்டுப்பிடிப்பு முகாம் நடத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கொரோனா நேரத்திலும் கூட, நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வசதி செய்தார்.ராமசந்திரா பொறுப்பில் இருந்தால், மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவார். இவரை பணியில் நீட்டிக்கும்படி, கித்வாய் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, கடிதம் எழுத உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X