சித்தேரிக்குப்பத்தில் தாசில்தார் குழு ஆய்வு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட விற்பனையாளர் பணிபுரிந்த கிராமத்தில், சிறப்பு தாசில்தார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் 464 ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளராக, சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் பணிபுரிந்தார்.அவர், சமீபத்தில் ரேஷன்
சித்தேரிக்குப்பத்தில் தாசில்தார் குழு ஆய்வு



விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட விற்பனையாளர் பணிபுரிந்த கிராமத்தில், சிறப்பு தாசில்தார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் 464 ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளராக, சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் பணிபுரிந்தார்.அவர், சமீபத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதா என, கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்ய உத்தவிட்டார்.அதன்பேரில், சிறப்பு தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமையில், துணை தாசில்தார் ராஜேஷ் அடங்கிய குழுவினர் நேற்று சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் 284 காார்டுகளை ஆய்வு செய்தனர். மீதம் உள்ள ரேஷன் கார்டுகளை நாளை (22ம் தேதி) ஆய்வு செய்ய உள்ளனர்.இதுகுறித்து சிறப்பு தாசில்தார் பன்னீர்செல்வம் கூறுகையில், 'கடந்த மூன்று மாதங்கள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட ரேஷன் பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்த பின் அறிக்கை தயாரித்து கலெக்டரிடம் வழங்குவோம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X