அம்மாபேட்டை, ஆக. 21-| Dinamalar

அம்மாபேட்டை, ஆக. 21-

Added : ஆக 21, 2022 | |
காதல் மனைவி தற்கொலை விவகாரத்தில், தொழிலாளியை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 32; கட்டட தொழிலாளி. இவருடைய காதல் மனைவி தேவயானி, 25; தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வருமாம். நேற்று முன்தினம் வழக்கம்போல், மனைவியுடன் தகராறு

காதல் மனைவி தற்கொலை விவகாரத்தில், தொழிலாளியை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 32; கட்டட தொழிலாளி. இவருடைய காதல் மனைவி தேவயானி, 25; தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வருமாம். நேற்று முன்தினம் வழக்கம்போல், மனைவியுடன் தகராறு செய்து விட்டு, வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் தேவயானி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் சாவில் சந்தேகம் இருப்ப தாக, தேவயானியின் பெற்றோர், அம்மாபேட்டை போலீசில் புகாரளித்தனர். கோபி.ஆர்.டி.ஓ., மற்றும் அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக, பாலசுப்பிரமணியத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X