மது கடைகள் 'பார்' உரிமம் கொடுப்பது 'டாஸ்மாக்' நிறுவனமா; தி.மு.க.,மா.செ.,க்களா?

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை : 'பார் டெண்டர்' ஆணையை தி.மு.க., மாவட்ட செயலர் சிற்றரசுவின் அலுவலகத்தில் பெற்று கொள்ளவும்' என, பார் உரிமையாளரிடம் ஒருவர் பேரம் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், பார் உரிம அனுமதியை 'டாஸ்மாக்' வழங்குகிறதா அல்லது தி.மு.க., - மா.செ.,க்கள் வழங்குகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.'டெண்டர்'தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,310 கடைகள் வாயிலாக
DMK, Tasmac, bar

சென்னை : 'பார் டெண்டர்' ஆணையை தி.மு.க., மாவட்ட செயலர் சிற்றரசுவின் அலுவலகத்தில் பெற்று கொள்ளவும்' என, பார் உரிமையாளரிடம் ஒருவர் பேரம் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், பார் உரிம அனுமதியை 'டாஸ்மாக்' வழங்குகிறதா அல்லது தி.மு.க., - மா.செ.,க்கள் வழங்குகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



'டெண்டர்'


தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,310 கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. அந்த கடைகளை ஒட்டி தின்பண்டங்கள், குளிர்பானம் விற்க தனியாருக்கு, பார் உரிமம் வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மது கடைகளில் பார் நடத்துவதற்கு உரிமம் வழங்க, 2021 டிசம்பரில், 'டெண்டர்' அறிவிப்பு வெளியிட்டது.

அதில், சென்னை மண்டலத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மது கடைகளுக்கும்; கிருஷ்ணகிரி, அரக்கோணத்தில் உள்ள மது கடைகளுக்கும் 'டெண்டர்' நடக்கவில்லை.மீதி, 30 மாவட்டங்களில் டெண்டர் நடந்தது. தற்போது டெண்டர் நடக்காத மாவட்டங்களில் உள்ள மது கடைகள் மற்றும் ஏற்கனவே டெண்டர் கோரியதில், பார் இல்லாத மது கடைகளுக்கு அதற்கான உரிமம் வழங்குவதற்கு, இம்மாதம் 18ம் தேதி டெண்டர் நடந்தது.


latest tamil news


இந்த டெண்டர் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் டெண்டர் நடைமுறைகளை தொடரலாம் என்றும், டெண்டர் ஆணை வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டது.



அவசியம்


இந்த சூழலில், தென் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சிற்றரசின் ஆதரவாளராக கூறிக் கொள்ளும் ஒருவர், சென்னையில் உள்ள பார் உரிமையாளர் ஒருவரிடம், 'உங்களின் பார் டெண்டர் ஆர்டர் ஆணையை மாவட்ட செயலர் சிற்றரசின் அலுவலகத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளவும்' எனக் கூறுகிறார். இதேபோன்ற நடைமுறை தான், அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுவதாக தெரிகிறது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், பார் உரிமம் வழங்குவதற்கான அனுமதியை, டாஸ்மாக் நிறுவனம் வழங்குகிறதா அல்லது தி.மு.க., மாவட்ட செயலர்கள் தருகின்றனரா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.எனவே, பார் உரிமம் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க, இதுதொடர்பாக தனி குழு அமைத்து, முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-ஆக-202202:42:38 IST Report Abuse
BASKAR TETCHANA அதெல்லாம் இல்லை. டாசுஸ்மார்க் இதற்க்கு லைசென்ஸ் கொடுப்பது கோபாலபுரம் கிட்சன் கேபினெட் சொல்லி அதை வழி மொழியை இரு வர உத்தரவுக்கு பின் தான் லைசென்ஸ் கொடுக்கின்றனர். அப்போது தான் மாதம் பாத்து லட்சம் கல்லா கட்ட முடியும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-ஆக-202220:09:22 IST Report Abuse
sankaranarayanan உங்களின் பார் டெண்டர் ஆர்டர் ஆணையை மாவட்ட செயலர் சிற்றரசின் அலுவலகத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளவும்' எனக் கூறுகிறார். ஓர் அரசு பெரிய அரசு மற்றொன்று சிற்றரசு. இதேபோன்ற நடைமுறை தான் சிற்றரசால் நடத்தமுடியும் என்பது தெள்ளத்ததெளிவாகிவிட்டது
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
21-ஆக-202218:00:33 IST Report Abuse
Vijay இதில் சந்தேகம் வேறையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X