ராஜன் வாய்க்கால் கரையில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சேத்தியாத்தோப்பு,-சென்னை - கும்பகோணம், சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்கால் கரையில் உள்ள சாலையில் தடுப்பு சுவர் இல்லாதததால் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.சென்னை - கும்பகோணம் சாலையில் ஓரத்தில் சேத்தியாத்தோப்பு, வெள்ளாறு ராஜன் வாய்க்கால் 20 அடி வரை பள்ளமாக உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், வேலுார், திருவண்ணாமலை
ராஜன் வாய்க்கால் கரையில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை



சேத்தியாத்தோப்பு,-சென்னை - கும்பகோணம், சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்கால் கரையில் உள்ள சாலையில் தடுப்பு சுவர் இல்லாதததால் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.சென்னை - கும்பகோணம் சாலையில் ஓரத்தில் சேத்தியாத்தோப்பு, வெள்ளாறு ராஜன் வாய்க்கால் 20 அடி வரை பள்ளமாக உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர்.வெள்ளாறுராஜன் வாய்க்கால் கரையோரத்தில் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அமைக்க வேண்டிய தடுப்புகள் இதுநாள் வரை அமைக்கவில்லை. சாலையில் செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் நேரத்தில் வாய்க்காலில் விழும் அபாயம் உள்ளது.தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்தபலனும் இல்லை.இந்த சாலை குறுகலாக உள்ளதால் எதிர்வரும் கனரக வாகனங்களை கடக்கும் வாகனங்கள் வாய்க்காலில் இறங்கும் அபாயம் உள்ளது.எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வெள்ளாறுராஜன் வாய்க்கால் கரையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X