வெளிமாநில வரத்து குறைவு மக்காசோளம் விலை உச்சம்| Dinamalar

வெளிமாநில வரத்து குறைவு மக்காசோளம் விலை உச்சம்

Added : ஆக 21, 2022 | |
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் கோடிக்கணக்கான முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோழிகளுக்கு முக்கிய உணவாக, மக்காச்சோளத்தை பண்ணையாளர்கள் அரைத்து, உணவாக வழங்கி


நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் கோடிக்கணக்கான முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோழிகளுக்கு முக்கிய உணவாக, மக்காச்சோளத்தை பண்ணையாளர்கள் அரைத்து, உணவாக வழங்கி வருகின்றனர். இதனால் நாமக்கல் பகுதியில் மட்டும் தினமும், 500 டன் மக்காச்சோளம் கோழி தீவனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மக்காச்சோளம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த, 2 மாதங்களுக்கு முன், மக்காச்சோளம் சீசன் முடிந்ததால், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம் மட்டுமே, விற்பனைக்கு வருகிறது. இதனால் கடந்த, ஒரு மாதத்துக்கும் மேலாக, மக்காச்சோளம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இரண்டு மாதத்துக்கு முன், ஒரு கிலோ மக்காசோளம், 23 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பின் மக்காச்சோளம் வரத்து குறைய தொடங்கியதால், அதன் விலை கிடுகிடு என உயர்ந்து, கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக, ஒரு கிலோ மக்காச்சோளம், 27 ரூபாய்க்கும் குறையாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மக்காச்சோளத்தை உணவாக பயன்படுத்த அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அதிக நஷ்டத்தை சந்தித்து வரும் பண்ணையாளர்கள், கோழித்தீவனம் மக்காச்சோளத்தின் விலையும் உயர்ந்துள்ளதால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து கோழிப்பண்ணை மூலப்பொருள் விற்பனையாளர்கள் கூறுகையில், ''சீசன் முடிந்ததால், மக்காச்சோளம் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மக்காச்சோளம் விலை, ஒரு நாள் மட்டும், கிலோ, 28 ரூபாய்க்கு விற்றதே அதிகபட்ச விலையாக இருந்துது. தற்போது, கிலோ, 27 ரூபாய் என, கடந்த, ஒரு மாதமாக விற்பனை செய்யப்படுவதால், இந்த விலை தான், அதிகபட்ச விலை,'' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X