ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய இளம்பெண்ணிடம் ரூ.7.70 லட்சம் மோசடி

Added : ஆக 21, 2022 | |
Advertisement
ஆன்லைன் மூலம், பகுதி நேர வேலை கேட்ட இளம் பெண்ணிடம், 7.70 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்து மண்டகபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி சரண்யாதேவி, 27. இவர் ஆன்லைன் மூலம், பகுதி நேர வேலை தேடியுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து, வாட்ஸ் ஆப் மூலம், வேலை இருப்பதாக தகவல் வந்தது. அதற்காக, பணம் கட்டி


ஆன்லைன் மூலம், பகுதி நேர வேலை கேட்ட இளம் பெண்ணிடம், 7.70 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்து மண்டகபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி சரண்யாதேவி, 27. இவர் ஆன்லைன் மூலம், பகுதி நேர வேலை தேடியுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து, வாட்ஸ் ஆப் மூலம், வேலை இருப்பதாக தகவல் வந்தது. அதற்காக, பணம் கட்டி டாஸ்க் செய்தால், வட்டியுடன் சேர்த்து வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, தனது ஐ.ஓ.பி., வங்கி மூலம், 2,000 ரூபாய் செலுத்தி உள்ளார்.
சிறிது நேரத்தில், வட்டியுடன் சேர்த்து, 2,520 ரூபாய் அனுப்பி உள்ளதாக செய்தி வந்தது. அவற்றை தனது வங்கி கணக்கில் டிரான்ஸ்பர் செய்துள்ளார். ஆனால், ஆகவில்லை. இது குறித்து, சம்பந்தப்பட்ட வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்டு கொண்டுள்ளார்.
அதற்கு, ஒரு லிங்க் கொடுத்து, அதில், 7 டாஸ்க் செய்தால் மட்டுமே கணக்கில் பணம் ஏறும் என தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி, மூன்று நாட்களில், ஏழு லட்சத்து, 68 ஆயிரத்து, 530 ரூபாய் செலுத்தி உள்ளார். அப்போதும் பணம் ஏறாததால், மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அந்த நபர், தாமதமாக பணம் கட்டியதால், பணம் ஏறவில்லை. மீண்டும் டாஸ்க் செய்தால் பணம் பெறலாம் என தெரிவித்துள்ளார். உஷாரான சரண்யாேதவி, தன்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X