தந்தை அடித்துக்கொலை போதையில் மகன் வெறி| Dinamalar

தந்தை அடித்துக்கொலை போதையில் மகன் வெறி

Added : ஆக 21, 2022 | |
மனைவி இறந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தவர், தன் தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடினார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ், 65. இவரது மகன் கார்த்திக், 40; லோடுமேனாக இருந்தார். கார்த்திக்கு திருமணம் ஆகி, மகன் உள்ளார். அவரது மனைவி, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், குடும்ப தகராறில் தற்கொலை


மனைவி இறந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தவர், தன் தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ், 65. இவரது மகன் கார்த்திக், 40; லோடுமேனாக இருந்தார். கார்த்திக்கு திருமணம் ஆகி, மகன் உள்ளார். அவரது மனைவி, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த, சில மாதங்களுக்கு முன் தான், ஜாமினில் வெளியே வந்தார்.
தினமும் மதுகுடித்து விட்டு வந்து, தன் தந்தை உள்ளிட்ட குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்த கார்த்திக், நேற்று முன்தினமும் வழக்கம் போல், தன் தந்தையிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில், அங்கிருந்த கட்டையால், தந்தையை அடித்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். நேற்று இரவு அதே பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X