இம்ரான் கான் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை

Updated : ஆக 22, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பேச்சை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது.இம்ரான் கான் தலைமையில் செயல்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஷபாஸ் கில், ராணுவத்திற்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் பேரணி நடத்தினார்.
ImranKhan, Hate Speech, LiveSpeech, Ban, Pakistanm    இம்ரான்கான், நேரடி பேச்சு, ஒளிபரப்பு,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பேச்சை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது.

இம்ரான் கான் தலைமையில் செயல்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஷபாஸ் கில், ராணுவத்திற்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் பேரணி நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், போலீஸ் காவலில் ஷபாஸ் கில் கொடூரமான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டார். எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், மக்களை பயமுறுத்தவும் கில் சித்ரவதை செய்யப்பட்டார். ஷபாஸ் கில்லை சித்ரவதை செய்ததற்காக இஸ்லாமாபாத் போலீஸ் ஐஜி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், பெண் மாஜீஸ்திரேட் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வோம். ஐஜியை விட்டு வைக்க மாட்டோம் என்றார்.


latest tamil news



இந்நிலையில், பாகிஸ்தான் ஊடக அமைப்பான பாகிஸ்தான் மின்னணு மீடியா ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், அரசு அமைப்புகளுக்கு எதிராக பேசுவதை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும். இம்ரான் கான், அடிப்படை ஆதாரமின்றி அரசு அமைப்புகள் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். அவரின் பேச்சு அரசியல்சாசனத்திற்கும், மீடியாக்களின் நன்னடத்தைக்கும் எதிரானது.
இதனால், சாட்டிலைட் டிவி சேனல்களில் இம்ரான் கான் பேச்சுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. அவரது பதிவு செய்யப்பட்ட உரையை, நன்றாக கண்காணித்ததுடன், எடிப்டோரியல் பிரிவினர் ஆய்வுக்கு பின் ஒளிபரப்பலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
21-ஆக-202216:13:54 IST Report Abuse
GANESUN மொழிபெயர்ப்பு செய்து டப்பிங் செய்ய உலக நாயகரை அழைக்கலாம் அரசாங்கத்தால் எடிட் செய்ய முடியாமல் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X